சென்னை டிசம்பர் 15, 2௦22
லஞ்சம், லஞ்சம், லஞ்சம் : இந்த வார்த்தை இப்போ நம்ம நாட்டுல சர்வ சாதாரண வார்த்தையாக போயிடுச்சு.
அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவ வார்டுகளுக்கு வெளியே அலைபாயும் மக்கள் உள்ளே பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள பெண்மணிகளின் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கொள்ள கொடுக்கத் துவங்கிய லஞ்சம் எனும் கையூட்டு கடைசிகட்ட காலத்தில் இடுகாடு வரை எல்லாவற்றுக்கும் சில்லறையாகவும் முழு நோட்டுக்களாகவும் கொடுத்தே ஆகவேண்டும். நீங்கள் கொடுக்க மறுத்தால் உங்களின் பணி ஓரிடத்தில் தேக்கமாகி நின்று விடும்.
உங்களின் தேவைக்காக அரசின் ஏதேனும் துறைகளுக்கு பணி நிமித்தமாக சென்றீர்களானால் அங்கே ஒவ்வொரு டேபிளும் அதன் ஊழியர்களும் உங்களிடம் கைநீட்டி கேட்பார்கள் அலல்து மறைமுகமாக குறிப்புணர்த்துவார்கள், சமிஞை செய்வார்கள் நீங்கள் அவற்றை கொடுத்தே ஆகவேண்டும்.
தமிழ்த்திரையுலகில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியான ஓர் படம் உண்டு இந்தியன் என்ற அத்திரைப்படத்தில் ஓர் வசனம் வரும் அங்கே (வெளிநாடுகளில்) எல்லாம் கடமையை மீறுவதற்கு தான்டா லஞ்சம் கேட்பாங்க ஆனா இங்கே (இந்தியாவில்) கடமையை செய்றதுக்கே லஞ்சம் கேட்குறாங்க என்பார் சேனாபதி எனும் அந்த இந்தியன் தாத்தா.
உண்மை தான் அல்லவா அந்த திரைப்படம் வெளியாகி சுமார் 26 வருடங்களாகிறது ஆயினும் லஞ்சம் ஒழிந்த பாடாக இல்லை. அது அசுரத்தனமாக இன்னும் மேலும் மேலும் தன்கொடூர கரங்களை விரித்து பெரிதாகிக் கொண்டே இருக்கிறது எனலாம்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் கடந்த 2௦2௦ ஆம் ஆண்டில் தமிழக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது திருச்சியில் லஞ்சப் பட்டியல் ஒன்றை வெளியிட்டார் அதில் மேற்சொன்னது போல் பிறப்பு முதல் இறப்பு வரை துறைரீதியாகவும் தொகைரீதியாகவும் தெளிவாக அப்பட்டியலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதிலிருந்து நம் நாடு என்ன வழியாக போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம்.
சரி லஞ்சம் வாங்குவதை தடுக்க அரசின் முக்கிய துறையான ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை என்று ஒன்று இருகிறதே அதன் பணி தான் என்ன என கேள்வி எழுப்புபவர்களுக்கு நமது பதில் தான் தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலகாரணம். அது எப்படி என்றால் ஏதோ ஒரு துறையில் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றுவிட்டார் என தெரிய நேர்தால் இனி எந்த சாட்சியும் அவசியம் இல்லை. ஒருவேளை குறிப்பிட்ட நபர் லஞ்சம் பெற்றார் என அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியபெற்றால் அவற்றை நிரூபணம் செய்ய வேண்டும் அதற்கு போதுமான ஆதாரங்கள் சாட்சியங்கள் வேண்டும் என சொல்லப்பட்டது. ஆனால் இதில் பல ஓட்டைகளை கொண்டு லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கைச் சந்திப்பவர்கள் வேறு ஏதேனும் வழிகளில் வெளியே வந்து விடுவார்கள். எனவே இவற்றுக்கெல்லாம் முற்றுபுள்ளி வைப்பது போல் தான் தற்போது நமது நாட்டின் உச்சநீதிமன்றம் சிறப்பான ஓர் தீர்ப்பினை தந்துள்ளது. இனி லஞ்சம் வாங்கியதை நேரிடையாக பார்த்த சாட்சி மட்டுமே செல்லும் என்ற நிலை கிடையாது அப்படி நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இனி லஞ்சம் கேட்போரையும் லஞ்சம் கொடுப்போரையும் சிக்க வைக்க ஏதுவாக இனி சட்டங்களை எடுத்தாளலாம்.
முன்பு சொன்னோம் அல்லவா பிறப்பு முதல் இறப்பு வரை கையூட்டு இல்லாமல் எதுவும் நகராது என்று, இதில் சில அரசு துறை அதிகாரிகள் தரப்பில் விதிவிலக்குகள் உண்டு லஞ்சம் வாங்காமல் நேர்மையான வழியில் சேவைகளை செய்து தருவது என வைராக்கியமாக இருந்து பணி ஒய்வு பெரும் வரை அதிலிருந்து இம்மியும் பிறழாமல் இருந்தவர்களும் இருப்பவர்களும் உண்டு.
பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்வின் ஒவ்வொரு அங்குலத்திலும் லஞ்சத்தின் கொடும்கரங்கள் நம்மைத் துரத்துகின்றன. இரண்டாண்டுகளுக்கு முன் ‘தமிழகத்தின் லஞ்சப் பட்டியலை’ மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நம்மவர் திரு கமல்ஹாசன் அவர்கள் திருச்சியில் அதிரடியாக வெளியிட்டார். அன்றிருந்த அரசும், இன்றிருக்கும் அரசும் அதைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியரைத் தண்டிக்க லஞ்சம் கேட்டதற்கான நேரடி சாட்சியம் அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பினை வரவேற்கிறோம். லஞ்சம் வாங்கும் பொது ஊழியர்கள் மீது விசாரணை நீதிமன்றங்கள் எவ்வித கருணையும் காட்டாமல் மிகவும் கண்டிப்புடன் விசாரணையை நடத்தவேண்டும் எனும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மக்கள் நீதி மய்யம் பாராட்டுகிறது. – மக்கள் நீதி மய்யம் செய்தி
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் வெளியிட்ட லஞ்சப்பட்டியல் குறித்தான இணையதள சேனல்கள் மற்றும் செய்தி நாளிதழ்கள்
MNM leader Kamal Haasan releases ‘rate card of bribery’ in TN – The Hindu