சென்னை : பிப்ரவரி ௦8, 2023

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராயபுரம் காவலர்கள் குடியிருப்பில் லோகேஷ் எனும் போக்குவரத்துக் காவலர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதற்கு முன்னதாக அவர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போக்குவரத்து உதவி ஆணையர் ஆகியோர் தன்னை டார்ச்சர் செய்ததாக வெளியிட்டுள்ள ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைப்பற்றி விவரங்கள் கொண்ட செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது.