சென்னை : பிப்ரவரி 08, 2023

தமிழகத்தில் விவசாயிகள் பலரும் சாகுபடி செய்த நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்து சேமிப்பது வழக்கம். அப்படிக் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் எந்த வித பாதுகாப்புகள் இன்றி வெறும் தார்பாய்களால் மூடப்படுகிறது. சில இடங்களில் அந்த தார்ப்பாய்கள் கூட தரமற்றதாக இருப்பதால் வெயில் மழை நாட்களில் சேமித்து வைக்கப்பட்ட உணவு தானியங்கள் பாழாகின்றன. இது குறித்து விசாரணை செய்து தக்க தீர்வு காணும்படி மக்கள் நீதி மய்யம் கேட்டுக் கொள்கிறது.

மழையில் நனையாமல் நெல்லை பாதுகாக்க வேண்டும்: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் – Dinakaran