கோவை : மார்ச் 19, 2௦23

தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு போன்ற பல மொழிப்படங்களில் முன்னணி நடிகராக வலம்வந்து புகழின் உச்சத்தில் இருக்கும் போதே தனது ரசிகர்களால் பல மாநிலங்களில் துவக்கப்பட்டு செயல்பட்டு வந்த கமல்ஹாசன் ரசிகர் மன்றம் மூலம் தனது ரசிகர்கள் கட் அவுட் வைத்து மாலை போட்டு பால் ஊற்றி போஸ்டர் ஓட்டுவதில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு துணிச்சலாக அவற்றை தடாலடியாக கலைத்துவிட்டு கமல்ஹாசன் நற்பணி இயக்கம் என மாற்றம் செய்து அதனை முறையாக பதிவும் செய்து அந்த இயக்கத்தின் தலைவராக தானே நின்று தொடர்ந்து வருடக்கணக்கில் நற்பணிகள் செய்தும் தனது இயக்கத்தை சார்ந்தவர்களை அவர்களுக்கு பொருளாதார ரீதியாக இயலும்வரை நற்பணிகள் செய்திட தூண்டுகோலாய் விளங்கி வருகிறார் என்றால் மிகையாகாது.

மக்கள் நீதி மய்யம் கட்சியை அதே போன்றே மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கமாய் வழிநடத்தி வருகிறார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள். தலைவர் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்பதாக இயன்றவரை நற்பணிகளை செய்து கொண்டே இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். தமிழகத்தை புரட்டிப் போட்ட புயலும், எதிர்பாரா தாக்குதலைத் உண்டாக்கிய கொரொனோ வைரஸ் தாக்கமும் சரி அதனை எதிர்கொண்டு அவதிப்பட்ட மக்களுக்கு உணவு தண்ணீர் மற்றும் அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து தந்துதவிய மய்யம் உறவுகள் வெயில்காலத்தின் துவக்க நாட்களில் தாகம் தீர்க்கும் நீர்மோர் பந்தல்களை ஆங்காங்கே துவக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் கோவையைச் சேர்ந்த மய்யத்தினர் நடமாடும் நீர் மோர் பந்தலை துவக்கி வைத்து அதனை திறம்பட நடத்தி வருகிறார்கள்.

கோவை தெற்கு பகுதி நகர செயலாளர் திரு தாஜுதீன், 80 ஆவது வார்டு செயலாளர் திரு பூபதி ராஜ் மற்றும் துணை செயலாளர் திரு கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்தனர். நீர் மோர் நிரப்பப்பட்ட கொள்கலன்களை சுமந்த வாகனத்தை மாவட்ட துணைச் செயலாளர் திரு சத்திய நாராயணன் துவக்கி வைத்தார். வாகனம் கோவை தெற்கின் முக்கிய பகுதிகளான ராஜவீதி, மணி கூண்டு, டவுன் ஹால், உக்கடம் மற்றும் வைசியர் வீதி ஆகிய தடங்களில் சுற்றி வந்தும் பின்னர் அங்குள்ள பேருந்து நிலையத்திற்கு சென்று அங்கே காத்திருக்கும் பொதுமக்களுக்கு வழங்கினர். இவற்றை சற்றும் எதிர்பாராத போது மக்கள் மகிழ்ச்சியில் நன்றி தெரிவித்தனர்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்வார் தலைவர் அவர்கள் அதே சமையம் மக்கள் நீதி மய்யத்தினர் இது போன்ற நடமாடும் நீர் மோர் பந்தலை சாலையெங்கும் கொண்டு சென்று தாகம் தீர்ப்பதை எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் முன்னெடுத்தது சிறப்புக்குரியது.

மய்யம் உறவுகளின் நற்பணியை மனதார பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது மய்யத்தமிழர்கள்.com