மதுரை : மார்ச் 27, 2023

கமல்ஹாசன் ரசிகர் மன்றம் என்பதை மிகத் தைரியமாக கலைத்துவிட்டு கமல்ஹாசன் நற்பணி இயக்கம் என்பதை கடந்த 40 வருடங்களுக்கு மேலாக எண்ணிலடங்கா நற்பணிகள் உலகெங்கிலும் செய்து வருகிறார்கள். நம்மவர் என்று அழைக்கப்படும் தலைவரின் எண்ணங்களை செயல்வடிவமாக்கி எளியோருக்கு உதவிகள் செய்து வருகிறார்கள் நம்மவரின் நம்மவர்கள். தமிழகத்தில் வசிப்பவர்கள் மட்டுமில்லாது அயல்நாடுகளில் வசிப்போரும் நற்பணிகளில் தங்களை உட்படுத்திக் கொண்டு பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பசி போக்குவதும் என பல வழிகளில் இடைவிடாது நடந்து வருவதற்கு சாட்சியாக இதோ ஓர் நற்பணி.

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட பெரியகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 LED வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகளும் கலர்பிரிண்டர் ஒன்றும் நன்கொடையாக வழங்கியுள்ளது வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் திரு பாலா தங்கவேல் மற்றும் திரு மா.செ.கதிரேசன் ஆகியோரின் சார்பாக மக்கள் நீதி மய்யம் துணைத்தலைவர் திரு மௌரியா மற்றும் மதுரை மண்டல செயலாளர் திரு M அழகர் அவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்களிடம் வழங்கினார்கள்.

பெரியகற்பூரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு 2 TV & Color Printer ஐ ஆசிரியர்களிடம் வழங்கினார்கள் துணைத்தலைவர் திரு. A.G.மௌரியா மற்றும் மதுரை மண்டல செ. திரு. M அழகர் கடந்த 2022 ஆண்டில் நவ 7 அன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பள்ளியில் கழிவறைகளை சீரமைத்திருந்தோம்கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்கா (KHWelfareNA)