சென்னை : மார்ச் – 2௦, 2௦23

கடந்த 2௦21 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் மகளிர் உதவித் தொகையாக ரூ.1௦௦௦ வழங்கும் என எழுத்துப்பூர்வமாகவும் தேர்தல் பரப்புரையின்போதும் தமிழகம் முழுக்க அறிவித்தார் கட்சித்தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.

அதனைத் தொடர்ந்து திமுகவும், அதிமுகவும் தன் பங்கிற்கு முறையே ரூ.1௦௦௦ மற்றும் ரூ.15௦௦ என தொகைகைளை குறிப்பிட்டு திரு கமல்ஹாசன் அவர்களின் அறிவிப்பையே நகலெடுத்து தனது தேர்தல் அறிக்கை மற்றும் பரப்புரையிலும் சொல்லிக் கொண்டார்கள்.

ஆக 2௦21 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியைப் பிடித்த திமுக பொறுப்பேற்றது முதற்கொண்டு அவ்வபோது மக்கள் நீதி மய்யம் தனது உரத்தக் குரலில் அறிவித்தபடி மகளிர் உரிமைத் தொகை என்பதை எப்போது மக்களுக்கு கிடைக்கச் செய்வீர்கள் என்று. அதற்கு எந்த பதிலும் உடனடியாக அறிவித்ததில்லை மாறாக தெளிவான தேதி எதையும் முறையாக அறிவிக்காமல் நாங்கள் தேதி போட்டோமா என்ற கிண்டல்தொனி பதில்களே அவ்வப்போது அமைச்சர்கள் சிலரால் வாய்மொழியாக மேடைகளில் பேசு பொருளாக்கப்பட்டது.

திமுகவின் தலைமையில் புதிய அரசு பொறுப்பிற்கு வந்ததை தொடர்ந்து இடைக்கால நிதிநிலை அறிக்கை பின்னர் அடுத்த நிதியாண்டான 2௦21-22 மற்றும் 2௦22-23 நிதிநிலை அறிக்கைகள் எதிலும் எந்த உறுதியான அறிவிப்பு மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் மத்தியில் சலசலப்பும் விமரிசனமும் பரவலாக எழுந்தது. இதனிடையே இன்று சட்டசபையில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகையை வரும் செப்டம்பர் மாதம் முதல் தகுதியான மகளிர்க்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் குறிப்பாக தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்ட சென்ட்ரிஸ்ட் கட்சியாக மக்கள் நீதி மய்யம் விளங்கி வருகிறது என்பதும் மக்களின் அடிப்படைத் தேவைகள் என்ன அவைகளை இதற்குமுன்னர் ஆண்டு வந்த கட்சிகளும் ஆளும் கட்சியும் செய்து தந்தார்களா மற்றும் கட்டமைப்பு வசதிகளை பொருளாதார முன்னேற்றங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையே 2௦21 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

“நாங்கள் தான் முதலில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்தோம்” – கமல்ஹாசன்  | nakkheeran

கிட்டத்தட்ட அவற்றில் இருந்த பல வாக்குறுதிகள் தற்போதுள்ள ஆளும் கட்சியினரால் பிரதி எடுக்கப்பட்டு அதனை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இல்லத்தரசிகளுக்கு ஊதியம்- முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி நாங்கதான்.. உரிமை கோரும் கமல்ஹாசன்! | Tamil Nadu budget 2023: Kamal Haasan welcomes Rs 1,000 monthly assistance for women – Tamil Oneindia

இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது: கமல்ஹாசன் ட்வீட் – Dinakaran

முதல்வரே!….. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?…. கேள்வி எழுப்பிய மநீம….!!! – Seithi Solai

https://www.kumudam.com/news/national/45447

https://zeenews.india.com/tamil/tamil-nadu/rs-1000-cash-aid-for-women-family-heads-not-announced-in-tn-budget-385885

வாக்குறுதியைக் காப்பியடிக்கக் காட்டிய வேகத்தில் சிறிதளவாவது அதனைச் செயல்படுத்துவதில் காட்டியிருந்தால் மகளிர் உரிமைத் தொகை இன்று சாத்தியமாகியிருக்கும் (toptamilnews.com)

https://www.vikatan.com/government-and-politics/politics/when-dmk-govt-will-announce-rs1000-amount-for-housewives