ஏப்ரல் 24, 2023
தேசிய பஞ்சாயத் ராஜ் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் திரு ராஜிவ்காந்தி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. ஆயினும் அது நடைமுறைக்கு ஆண்டு 1992 ஏப்ரல் 24 அன்று சட்டமாக அமல்படுத்தப்பட்டது.
மாநிலங்களை ஆளும் ஆட்சிக்கு உட்பட்டு ஒவ்வொரு கிராமப் பகுதிகளும் தங்களின் தேவைகளை கண்டுணர்ந்து அவற்றை தாங்களே நிறைவேற்றிக் கொள்ள இந்த கிராம சுயாட்சி திட்டம் பெரும் உதவியாக இருக்கும்.
பஞ்சாயத்து ராஜின் நோக்கம் அதிகாரத்தை பரவலாக்குவது அதனையும் பொதுமக்கள் நேரிடையாக எந்த ஒளிவுமறைவும் இன்றி அறிந்து கொள்வது. மக்களின் பிரதிநிதியாக தங்களில் பலரை தகுந்த பொறுப்புகளில் நியமித்து ஆளும் பஞ்சாயத்து ராஜ் அனைத்தும் வலிமையானவை.
இன்னும் சொல்வதென்றால் சோழர் காலத்தில் உத்திரமேரூர் கல்வெட்டு மூலம் குடவோலை முறையில் தேர்வு செய்தலும் மற்றும் வாரியம் பற்றியும் 1882 இல் ரிப்பன் பிரபு சுய ஆட்சி திட்டம் பற்றியும் பஞ்சாயத்துச் சட்டம் பற்றியும் அறிய முடிகிறது.
கிராமம் ஒன்றியம் மாவட்ட அளவில் அதிகாரப் பகிர்வு உள்ளது 1/3 இல் பங்கு பெண்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். கிராமம் ஒன்றியம் மாவட்டம் என மூன்று அடுக்குகள் கொண்டது.
இத்திட்டத்தின் கீழ் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, குடிநீர் விநியோகம், தெருவிளக்கு, சுகாதாரம், கல்வி, நூலகம், தூய்மைப் பணிகள், மருத்துவ வசதிகள், மகப்பேறு மருத்துவமனைகள், பூங்கா, பாதாளச் சாக்கடை போன்ற தேவைகளை போன்ற பராமரிப்புகளை செய்வதும் அதற்கான நிதியை மத்திய அரசின் பஞ்சாயத் திட்டத்தின் கீழ் பெற்றுக் கொள்வதும் பெற்ற நிதிகளை தகுந்த திட்டங்களில் செலவிட்டு பின்னர் அதன் நிதிநிலை அறிக்கைகளை பொதுவெளியில் ஆலோசனைக் கூட்டங்கள் ஏற்பாடு அதனை மக்களுக்கு தெரிவித்தும் அடுத்த ஆண்டிற்கான செய்யப்படவேண்டிய பணிகளை கலந்து ஆலோசித்தல் ஆகியன நடைபெறும் பணிகள் ஆகும்.
5 உறுப்பினர்களை கொண்டதும் நிதிக் கொள்கை நிதி ஆதாரமும், நிதிப் பங்கீடு போன்ற ஆலோசனைகளும் வழங்கி வருகிறார்கள்.
வீட்டு வரி, கேளிக்கை வரி, தொழில் வரி, சொத்து வரி, குடிநீர் வரி, விளம்பர வரி வசூலித்தல் மத்திய மாநில அரசுகளிடம் இருந்து நிதி பெறுதல் போன்றவையும் நிதி ஆதாரமாக கருதப்படும்.