புது தில்லி : மே 23, 2௦23
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தேசிய மல்யுத்த கவுன்சில் தலைவராக பதவி வகித்து வருகிறார். அந்த கவுன்சிலில் பயிற்சி பெற்று தேசிய அளவிலும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பல வெற்றிகளையும் குவித்து பதக்கங்களையும் பெற்று நமது இந்திய தேசத்தின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யும் பெண் வீரர்கள் பலரும் வெகு காலமாக தங்கள் மனதினுள் தேக்கி வைத்திருந்த வேதனைகளை கடந்த மாதத்தில் பொதுவெளியில் வேறுவழியில்லாமல் கொட்டினர். தேசிய மல்யுத்த கவுன்சிலின் தலைவர் தங்களுக்கு அளிக்கும் பாலியல் தொல்லைகள் தான் அது.
பெண்குழந்தைகள் பாதுகாப்போம் என்று முழங்கும் தலைமையின் போக்கிற்கு எதிராக இளம்பிராய பெண் குழந்தைகள் முதல் வயது வித்தியாசம் பாராமல் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட வீராங்கனைகள் வரை அவர்களுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்துவருவதாக அவ்வீரர்களே செய்தி ஊடகங்களின் முன் பொதுவெளியில் சொல்வது உலகமெங்கும் நமது இந்திய தேசத்தின் மீது படும் கரும்புள்ளிகள் ஆகும். சர்வதேச அளவில் நமது இந்தியாவின் மானம் கப்பலேறிப் போகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
பாலியல் தொல்லைகளை இதற்குமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதாக தில்லியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து போராடி வருகிறார்கள் மல்யுத்த வீரர்கள். இப்போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைவரும் ஒருமித்த குரல் எழுப்புவது சம்பந்தப்பட்ட கவுன்சில் தலைவரின் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே. இந்த தொடர்போராட்டதின் தீவிரத்தை உணர்ந்து வழக்கு பதியப்பெற்று குற்றம் சுமத்தப்பட்டவரை கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து எந்த அரசியல் பின்புல தடைகளும் இல்லாமல் வெளிப்படையாக ஆய்வு செய்து அதன் பிறகு அவருக்கு சட்ட ரீதியாக தண்டனை அளிப்பது அரசின் தார்மீக கடமை. மேலும் போராடும் வீரர்களுக்கு உரிய பாதுகாப்பினை அளிப்பது நமது அரசின் கட்டாயம்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் நீண்ட கண்டன அறிக்கையொன்றை இதற்கு முன்னதாக வெளியிட்டார். எனினும் இந்த பிரச்சினையில் இன்னும் தெளிவான முடிவு எட்டப்படாமல் போராட்டம் நீடித்து வருவதைக் கண்டு தனது கண்டனத்தை மிகுந்த உறுதியுடன், போராடும் வீரர்களின் மனரீதியான மற்றும் உடல்ரீதியான உளைச்சலில் உள்ளதை மிகுந்த வலியுடன் பதிவு செய்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள்.
”சொந்த பாதுகாப்புக்காக போராடும் நிலைக்கு நிர்பந்தம்” – கேள்வி எழுப்பும் கமல்ஹாசன்! (malaimurasu.com)
நமது மய்யத்தமிழர்கள் இணையதளத்தில் இதற்கு முன்னதாக வெளியான கட்டுரையின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது (இது குறித்து மக்கள் நீதி மய்யம் அறிக்கையும் வெளியிட்டது உங்களின் பார்வைக்கு அதனுள் இணைக்கப்பட்டுள்ளது)