சென்னை : ஜூலை 14, 2023
கடந்த 2௦21 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது எண்ணிலடங்கா பல அற்புதமான வாக்குறுதிகளை தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்து அவற்றை மக்களிடம் கொண்டு சென்றது மக்கள் நீதி மய்யம். அதில் மகளிருக்கு உதவிடும் நோக்கில் மாதாமாதம் ஊதியம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதியளித்த மய்யத்தின் திட்டத்தினை ஒட்டி அதே போன்று ஆளும் திமுக அரசு வரும் செப்டெம்பர் மாதம் முதல் வரையறைக்குட்பட்ட மகளிர்க்கு மாதம் தோறும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதே போன்று அதனைத் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் அளிப்போம் என மக்கள் நீதி மய்யம் தலைவரான திரு கமல்ஹாசன் 2௦21 தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தார். தற்போது அதனையும் செயல்படுத்திட தமிழக அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறுகிய வட்டத்திற்குள் அடங்காது மக்கள் நீதி மய்யம் என்பதற்கு இவையெல்லாம் சாட்சியாக அமைகின்றன. பரந்துபட்ட திட்டங்களுடன் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியலில் களமிறங்கிய மய்யம் அதன் கொள்கைகள் மற்றும் அறிவிப்புகள் யாவும் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் நேரிடையாக எந்த ஒளிவுமறைவும் இன்றி செயல்படுத்தப்படும் நாள் இன்னும் வரும் காலங்களில் நிச்சயம் அமையும் என்ற அசையாத நம்பிக்கையுடன் நடை போட்டுக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.
மக்கள் பிரதிநிதிகளுக்கு ஊதியம் வழங்கப்படும் என்று நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் அன்று 2021 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தார். இன்று தமிழ்நாடு அரசு மதிப்பூதியம் அளிப்பதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வாழ்த்தி வரவேற்கிறது மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan#MakkalNeedhiMaiam