கடலூர் : ஜூலை 29, 2௦23
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. அது தற்போது தனது இரண்டாவது சுரங்கம் அமைத்திட வேண்டி கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கிராமங்களில் அதற்கான நிலங்களை கையகப்படுத்த ஆயத்தமாகி வருகிறது. அங்கே நெற்பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் JCB எனும் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு விளைந்துள்ள பயிர்களை கண்டுகொள்ளாமல் அவற்றை சமன் செய்து வருவதால் விவசாயிகள் மற்றும் ஊர்மக்கள் யாவரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்துபோய் தங்களது அடிப்படை வாழ்வாதாரமே நிர்மூலமாவது கண்டு அதனை எதிர்த்து போராடி வருகிறார்கள். இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் விவசாய நிலங்களை கையகபடுத்தும் பணிகளை கைவிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மற்றும் NLC நிறுவனமும் இணைந்து சீர் செய்து நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.