ஜூலை 15, 2௦23

Indian Space Research Organisation (ISRO) இந்திய விண்வெளி ஆய்வு மையம் கடந்த 2௦19 ஆண்டில் சந்திராயன் 2 எனும் செயற்கை கோள் நிலவிற்கு அனுப்பிவைத்தது எனினும் அது ஓர் தொழில்நுட்ப கோளாறினால் அதற்கான பாதையில் தரையிறங்காமல் திட்டமிட்ட தடத்திலிருந்து விலகி வேறோர் இடத்தில இறங்கியதால் இத்திட்டம் தோல்வியயை தழுவியது. எனவே அந்த இடர்பாடுகள் கடந்து துல்லியமாக வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 உருவாக்கப்பட்டது அதனை நேற்றைய தினமான ஜூலை 14, 2௦23 அன்று ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இது குறித்து மக்கள் நீதி மய்யத் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாயுவில் சாடி ஒரு வானவெளிப் பயணம். நிலவை நோக்கி நீள்கிறது மனித எத்தனம். வெற்றிகரமாக விண்ணில் யாத்திரை தொடங்கியிருக்கிறது சந்திரயான் 3. இஸ்ரோவின் விடாமுயற்சிக்கும் விஞ்ஞானத்தின் வெற்றிக்கும் மனமார்ந்த வாழ்த்து. திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

#Chandrayaan3