ஆகஸ்ட் 23, 2௦23

இஸ்ரோ அமைப்பு நிலவை ஆய்வு செய்யும் சந்திராயன் 3 விக்ரம் லாண்டர் எனும் விண்கலம் ஒன்றை கடந்த ஜுலை மாதம் 14 ஆம் தேதியன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அதனை இன்று மாலை இந்திய நேரப்படி மாலை 5.47 மணியளவில் வெற்றிகரமாக நிலவை அடைந்தது. இந்த அற்புதமான நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்ப திட்டமிட்ட மக்கள் நீதி மய்யம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் திரையிடப்பட்டது. இதனையொட்டி மய்யம் துணைத்தலைவர், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அந்த அற்புதமான தருணத்தை பெருமிதம் பொங்க கண்டுகளித்தார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.

“அந்தி சாயும் வேளையில் நிலவில் இந்தியாவின் உதயம்” சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ளது. இந்நிகழ்வு உலக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. இந்தியராகிய நாம் அனைவரும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வாகவும் இது திகழ்கிறது. இவ்வெற்றியை கொண்டாடும் விதமாக, தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மக்கள் நீதி மய்யம் தலைமை நிலையத்தில் கோலாகல விழாவாக கொண்டாடப்பட்டது. நிகழ்வில் பொதுச் செயலாளர் திரு. அருணாச்சலம், நற்பணி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு.சிவ இளங்கோ, திரு. அர்ஜூனர், திரு.ராகேஷ் ராஜசேகரன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு.ஜான்சன், திரு.மயில்வாகனன் மற்றும் மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

#KamalHaasan

#Vikram

#Chandrayaan3

#ISRO

#ProudIndian