ஆகஸ்ட் 08, 2023
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 3 மாதங்களாக இரு சமூகத்தினரிடையே நடந்த மோதல் குறித்து பல கட்டுரைகளில் தொடர்ச்சியாக எழுதி இருந்தோம். நாடெங்கிலும் இது குறித்து கவலையடைந்துள்ளனர். மதவாதத்தின் மொத்த உருவமாக ஆளும் கட்சி உருவெடுத்து நிற்கிறதோ என தோன்றும் அளவிற்கு அவ்வளவு நெருக்கடிகள் தந்துவருவதாக பெரும்பாலும் அறியப்படுகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான (MP பதவியை தகுதிநீக்கம் செய்தது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்) திரு ராகுல்காந்தி அவர்கள் மணிப்பூர் சென்று அங்குள்ள மக்களை சந்திக்க முயன்ற போது மாநில காவல்துறை மற்றும் நிர்வாகத்தினால் மணிப்பூர் எல்லையில் தடுக்கப்பட்டு அங்கே இருந்த பொதுமக்களிடம் மட்டுமே ஆறுதலும் நம்பிக்கையும் தந்து விட்டு வந்தார். அதன்பிறகு இந்நிலை குறித்து தகவலறிந்து தனிவிமானம் விமானம் மூலம் மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் புறப்பட ஆயத்தமாக நின்றபோது பாதுகாப்பு நலன் கருதி அவருக்கும் மணிப்பூரில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது கட்சியின் பொதுச்செயலாளர் திரு. அருணாச்சலம் அவர்களை அங்கே அனுப்பி வைத்து உண்மையான நிலவரம் என்னவென்று ஆய்வுகள் மேற்கொண்டு வரச்செய்தார். தலைவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்படி மணிப்பூருக்கு பயணித்து அங்கே உயிரைப் பணயம் வைத்து கலவரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு மக்களான மெய்தி, குக்கி மற்றும் நாகா என தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களில் சென்று சந்தித்து அவர்களின் உண்மையான நிலை என்னவென்பதை அவ்வபோது அங்கிருந்தபடியே தெரிவித்தார். பலரது வீடுகள், இருசக்கரம் மற்றும் மூன்று நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவைகள் தீக்கிரையாகி உள்ளது, நிறுவனங்கள், கடைகள் சூறையாடப்பட்டு உள்ளதும், இளைஞர்கள் தங்களது கல்வி சான்றிதழ்கள் மற்றும் பல ஆவணங்களை பறிகொடுத்துள்ளது கண்டு மனம் நொந்து நின்றவர் மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் குழந்தைகள் படிக்கும் பள்ளிகூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதால் அவர்களின் கல்வியும் முற்றிலுமாக தடைபட்டு நிற்பது இன்னும் பெரும்சோகம் தளும்பி நிற்கிறது. கலவரம் மூலம் மனதுக்கு மிகுந்த வலியையும் வேதனையும் தந்து விட்ட இந்த நாட்கள் எல்லாம் எதிரிக்கும் வரக்கூடாது என்று நினைக்கும்படியாக தோன்றுகிறது என்றும் வேதனையை பகிர்ந்து கொண்ட திரு அருணாச்சலம் அவர்கள் அங்கிருந்த மக்களிடையே தலைவர் பற்றியும் எடுத்துரைத்து உங்களுக்கு தேவையான எந்த உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் முன்னின்று செய்து தர தயாராக உள்ளது என்றும் சொல்லியதாக குறிப்பிட்டார்.
இதற்கெல்லாம் என்ன தான் தீர்வு ?
மணிப்பூரில் ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் எதுவும் சிக்கலை தீர்ப்பது போலல்லாமல் இருப்பதாக தெரிகிறது. மக்களின் நலன் கருதியோ அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது பற்றியோ எந்த கவலையும் இல்லாமல் இருப்பதாகவே தோன்றுகிறது என்பது அந்த அரசு தனது மாநில மக்களை காக்கத் தவறிய தார்மீக பொறுப்பற்ற ஓர் அரசாக இருப்பது அந்த இயந்திரம் முற்றிலும் பழுதடைந்து தனது இயக்கத்தை நிறுத்தி விட்டதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டு மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும் சமீபத்தில் இந்த அன்முறை கண்டு அச்சம் கொண்ட உச்சநீதிமன்றம் அதன் தலைமை நீதிபதி அவர்கள் அதே போன்ற கருத்தை பிரதிபலித்து குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் இருந்து வேறு எந்த கட்சியும் மணிப்பூர் செல்ல முடியாத போது அங்கே துணிச்சலாக சென்று தகவல்கள் திரட்டி வந்தது மக்கள் நீதி மய்யம் மட்டுமே. என்பது நிச்சயமான உண்மை. இதுகுறித்து அறிந்துகொண்ட தலைவர் அவர்கள் ஆளும் மத்திய அரசையும் மணிப்பூர் மாநில அரசையும் அவர்களின் மெத்தனப்போக்கு அவைகளை கண்டித்து மாநிலம் தழுவிய மிகப்பெரும் ஆர்பாட்டம் ஒன்றை கடந்த 6 ஆம் தேதியன்று நடத்தச் செய்தார். ஆர்ப்பாட்டம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர்கள் முன்னிலை வகித்தும், கட்சியின் துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநிலச் செயலாளர்கள், துணை & இணைச்செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் நற்பணி அணியின் நிர்வாகிகள் என பல இரண்டாம் கட்ட முக்கிய தலைவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளான அளவில் கலந்து கொண்டு மத்திய அரசு மற்றும் மணிப்பூர் அரசுகளை எதிர்த்து கோஷம் எழுப்பியும் இதற்கான சுமூக தீர்வை எட்ட வேண்டும் என்றும் முக்கியமாக மணிப்பூர் பிஜேபி ஆட்சியை கலைத்துவிட்டு மாண்புமிகு குடியரசு தலைவர் அவர்களின் ஆட்சியை அமல்படுத்தி பின்னர் அமைதி திரும்பி சுமூகமான நிலை அடைந்ததும் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை உச்சஸ்தாயியில் எழுப்பினர்.
நடந்து முடிந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் குறித்தும் அதனை முன்னெடுத்து நடத்திய அனைத்து நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் உறவுகள் அனைவரயும் மனதார பாராட்டுவதாக தமது ட்விட்டர் பக்கத்தில் குறிபிட்டுள்ளார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம் குறித்தான செய்திகள் வெளியான நாளிதழ்கள் & ட்விட்டர் பதிவுகள்