ஜனவரி 30, 2024

இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது, தேர்தல் நடைபெறும் நாள் எப்போது என்பதை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில கட்சிகளும் போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றன. நடைபெற்று வரும் ஆட்சி தொடருமா அல்லது மாற்றாக வலுவாக களமிறங்கும் எதிரணி போட்டியில் வெல்லுமா என பொதுமக்களும், அரசியல் விமர்சகர்களும் உற்று நோக்கி வருகிறார்கள். எந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைப்பது என்பதில் இன்னமும் தெளிவான முடிவுகள் வெளியாகவில்லை.

இந்நிலையில் 2019 இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற மக்கள் நீதி மய்யம் தற்போது இரண்டாவது தேர்தலை சந்திக்க இருக்கிறது. இம்முறை தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என பலரும் யோசிக்கையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான திரு கமல்ஹாசன் அவர்கள் கடந்த சில நாட்கள் முன்பு செய்தியாளரை சந்தித்த போது இதுவரை கூட்டணி யாருடன் என்பது பற்றி முடிவு செய்யவில்லை, அப்படி ஓர் சந்தர்ப்பம் உண்டாகும் என்றால் மக்களுக்காக நல்லது எதுவோ அதனை நிச்சயம் எங்கள் கட்சி முன்னெடுக்கும் மேலும் எனது கட்சி நிர்வாகிகளிடம் கூட்டணி குறித்து நீங்கள் எந்த சிந்தனயும் கொள்ள வேண்டாம், அதை பார்த்துக் கொள்வது எனது பொறுப்பு, அதே சமையம் தேர்தல் பணிகளை துவங்கி தொடர்ந்து செல்லுங்கள் என்று சொல்லி இருந்தார்.

இந்நிலையில் இன்று பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தேர்தல்பணி ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை அமைத்துள்ளதாக தலைவர் கமல்ஹாசன் அவர்களின் ஒப்புதலோடு மக்கள் நீதி மய்யத்தின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.

https://twitter.com/pttvonlinenews/status/1752322060469317997?s=48&t=51VQMy0ztQREyJwZNi4bpQ