சென்னை : மார்ச் 20, 2024

வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் நமது மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையிலும் ஆலோசனைகள் படியும் பல பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. அதனையொட்டி இன்றைக்கு ம.நீ.ம தலைமை நிலையத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் தலைமையில் தேர்தல் பரப்புரையாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பரப்புரையாளர்கள் அனைவரும் வந்திருந்து பல கட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வலுப்படுத்தும் விதமாக கட்சியின் பரப்புரையாளர்கள் கூட்டம் இன்று (20.03.2024) தலைமை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.” – மக்கள் நீதி மய்யம், ஊடகப்பிரிவு