சென்னை : மார்ச் 19, 2024

மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதாக இலங்கை கடற்படையினரால் தொடர்ச்சியாக நமது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களது வாழ்வாதாரமான மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல்செய்து தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். மீன்பிடித்தலின் போது மீனவர்கள் எல்லை தாண்டுவதாக பொய்ப் புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இலங்கை கடற்படையினர். பல முறையீடுகளுக்கு பின்னர் மீனவர்களை விடுவித்தாலும் அவர்களது மீன்பிடி உடைமைகளை திரும்பத் தருவதில்லை அதனால் அவைகள் சேதமாகிவிடுகின்றன அதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது மேலும் அவர்களை விடுவிக்காமல் சிறைகளில் நீண்ட காலம் அடைத்தும் வைக்கிறார்கள் என்பது இன்னும் கொடுமை.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 21 மீனவர்களை கைது செய்தும் இன்னமும் விடுவிக்காமல் காலதாமதம் செய்து வருவதை குறித்து ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் தொடர்ச்சியாக இது போன்ற அட்டூழியத்தை வன்மையாக கண்டிக்கிறதுமக்கள் நீதி மய்யம், மீனவர் அணி

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது தொடர் அத்துமீறல்களை வேடிக்கைப் பார்ப்பதா? மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம். மீனவரணி மாநில செயலாளர் திரு. R.பிரதீப் குமார் அறிக்கை.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam #TNFishermen #Fishing #FisherMenIssues