சென்னை : மார்ச் 16, 2024

ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தலையாய கடமையாகும். ஒவ்வொரு நாளும் நாம், உண்டு உறங்கி பணி செய்து கல்வி கற்று வாழ்தல் போல ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் தேர்தல்களில் தவறாமல் வாக்களித்து நமது கடமையை நிறைவேற்றுவோம்.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழலில் நமது கடமையை நிறைவேற்ற தவறினால் அதன் விளைவுகள் இன்னும் அதிக அசௌகரியம் தருமளவிற்கு மாறிவிடும்.

மதச்சார்பற்ற, ஸ்திரத்தன்மையை உறுதிசெய்யும் பொருளாதார நிலை, நாட்டின் தொழில் மற்றும் விவசாயம் உற்பத்திகள், மக்களின் அடிப்படை தேவைகள், கட்டமைப்புகள், அயல்நாடுகளுடனான நட்புறவு, உலக அளவில் சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வி என பல முக்கிய காரணிகள் இத்தேர்தல் மூலம் மீண்டும் உறுதி செய்வதும் மிக முக்கியம்.

எனவே வாக்காளர்கள் தமது பொறுப்பை உணர்ந்து வருகின்ற தேர்தலில் தங்களது வாக்கினை தவறாமல் செலுத்த வேண்டுமென்று மக்கள் நீதி மய்யம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

“தேர்தல் நாளன்று தவறாமல் வாக்களியுங்கள். நமக்கும், நாம் வாழும் சமூகத்துக்கும், வருங்காலத் தலைமுறைக்கும் நாம் செய்யவேண்டிய தலையாய கடமை இது. தேசம் காக்க, ஒன்று கூடுவோம்; வென்று காட்டுவோம்; நாளை நமதே.”மக்கள் நீதி மய்யம்


#KamalHaasan
#MakkalNeedhiMaiam