மதுரை : மே 26, 2024
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் மீதான அபிமானத்தின் காரணமாக பல நற்பணிகளை செய்து வருகிறார்கள் கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்ந்தவர்கள். இதில் இன்னும் மேலதிகமாக கடல் கடந்தும் இயங்கும் நற்பணி இயக்க தோழர்களும் நல்லவைகளை தமிழகத்தில் செய்து வருகிறார்கள் என்பதற்கு சாட்சியாக பல திட்டங்கள் உள்ளது. அதில் ஒன்று கடந்த மாதத்தில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மலைச்சாமிபுரம் எனும் ஊரில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் யாவரும் படித்துப் பயனுற வேண்டி நம்மவர் படிப்பகம் எனும் நூலகம் ஒன்றினை புதிதாக கட்டுமானம் செய்து அங்கு பல துறைகளை உள்ளடக்கிய அனைத்து புத்தகங்களும் இடம்பெறச் செய்தும் அதனை இலவசமாக படித்துக் கொள்ளலாம் என்றும் ஓர் சிறப்பான செயலை செய்து முடித்திருந்தனர், நம்மவர் தலைவர் அவர்களும் அங்கே நேரிடையாக சென்று நம்மவர் படிப்பகத்தினை பார்வையிட்டு ஊர் மக்கள் முன்னிலையில் உளமார பாராட்டி பேசினார். அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்கள் முன்பு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின அதில் தேர்ச்சி பெற்ற 25 எளிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதனை வழங்கிய வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வந்திருந்த அனைவரையும் பாராட்டி வாழ்த்துகளும் நன்றியும் தெரிவித்தனர்.
“10, 11-ம் வகுப்பில் தேர்வுபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மலைச்சாமிபுரம் நம்மவர் படிப்பகத்தில் விருது, கல்வி உதவி வழங்கும் விழா வடஅமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வழங்கியது. 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 25 மாணவ, மாணவிகளுக்கு, மலைச்சாமிபுரத்தில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில், வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் விருது மற்றும் கல்வி உதவி வழங்கும் விழா நேற்று (25.5.2024) மாலை 5 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், அறிவியல் விஞ்ஞானி திரு. லட்சுமி நாராயணன், பேராசிரியர் திருமதி பிரபா, சக்கிமங்கலம் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.தென்னவன், மக்கள் நீதி மய்யம் மதுரை மண்டலச் செயலாளர் திரு.அழகர் மற்றும் திருமதி சுமதி அழகர், கொடிக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.திருப்பதி (மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கியவர்), நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.சொக்கர், மாவட்டச் செயலாளர் திரு. க.கதிரேசன், கிராமப் பொறுப்பாளர் திரு. பிரபாகரன் மற்றும் மலைச்சாமிபுரம் மாணவ மாணவிகள், பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்புரையாளர்கள் நிகழ்த்திய உரை, மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. அதேநேரத்தில், இந்த விழா அடுத்த தலைமுறைக்கான தொடர் பயணத்துக்கு ஆக்கமளிப்பதாகவும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.” – மக்கள் நீதி மய்யம்
#KamalHaasan #MakkalNeedhiMaiam #நம்மவர்_படிப்பகம்
நன்றி : மக்கள் நீதி மய்யம் & வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம்