தமிழ்நாடு : ஆகஸ்ட் 13, 2024
2018 ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கிய பின்னர் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த கிராம சபை எனும் அமைப்பை அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொரு இடத்திலும் மேடையிலும் விளக்கிக் கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய ஒரே அரசியல் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மட்டுமே. ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை மற்றும் ஏரியா சபை என்பது நடைபெற வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தார். அதே போன்று தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரிடமும் தமது நிர்வாகிகள் மூலமாக நேரிடையாக மனுக்களை அளித்து கோரிக்கை வைக்கசெய்தார். கடந்த 2021 இல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து புதிய அரசிடமும் அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டார். தொடர்ச்சியாக மக்கள் நீதி மய்யம் கிராம சபை நடைபெறுவதன் அவசியத்தை வலியுறுத்தி வந்ததை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் உடனடியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளாட்சி மன்றங்கள் அமையபெற்றுள்ள பகுதியில் கிராம சபைகள் நடைபெற வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது.
அதன்படி 78 ஆவது சுதந்திர தினத்தன்று சிறப்பு கிராம சபை நடைபெற உள்ளது. எனவே மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட நிச்சயம் கிராம சபையில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்கள் மற்றும் நடைபெற வேண்டிய பொதுப்பணிகள் குறித்து அச்சபையில் முன்வைக்க வேண்டும் என்று தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
“தலைவரின் வழிகாட்டுதலின்படி… கிராம சபையில் பங்கேற்போம்…”
நன்றி : மக்கள் நீதி மய்யம், சமூக ஊடக செய்திக் குறிப்பு
#KamalHaasan #MakkalNeedhiMaiam #GramaSabha