குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் !
டிசம்பர் 27, 2024
சென்னை அண்ணா பலகலைக்கழகம் வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இது பெரும் அதிர்வைத் தந்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உலகப்புகழ்பெற்ற அண்ணா பல்கலை வளாகத்தில் ஒரு இளம்பெண்ணிற்கு இது போன்ற அசம்பாவிதம் நடந்துள்ளது குறித்து பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. மேலும் பாதிப்படைந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் இத்தகைய குற்றங்கள் பெண்கள் மீது நடத்தப்படுவது விரும்பத்தகாதது பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களின் எதிர்காலம் மிகுந்த பாதுகாப்புடன் இருந்திட வழிவகை செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அரசியல் தலைவர்கள் பலரும் இக்கொடூரத்தை கண்டித்து வருகிறார்கள். அதன்படியே புலன் விசாரணையை விரைந்து முடித்து அப்பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய நீதியை பெற்றுத் தருமாறு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அதன் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் பலாத்காரம்.
குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து வழங்கவேண்டும்! – மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல் !
நன்றி : மக்கள் நீதி மய்யம்