அக்டோபர் 01, 2024

தமிழ்த்திரையுலகில் இருபெரும் ஜாம்பவான்களான திரு.கமல்ஹாசன் மற்றும் திரு.ரஜினிகாந்த் ஆகிய இருவரும் உற்ற நண்பர்களாக திகழ்ந்து வருகிறார்கள். படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவரும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்கென தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. AI தொழிநுட்ப பயிற்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள நம்மவர் அவர்கள் திரு.ரஜினிகாந்த் அவர்கள் சிகிச்சைகள் மேற்கொண்டு விரைவில் பூரண நலமடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி : Dr. K.H – இணையதளம்