நவம்பர் 25, 2024
இந்திய தேர்தல் ஆணையம் நடைபெறும் நவம்பர் மாதத்தில் கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் அப்பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்த்தல் மற்றும் தகவல்கள் திருத்தம் செய்வதும், புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் விண்ணப்பித்தல் போன்ற பணிகளை செய்யும் முகாம்கள் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் இம்மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற முகாம்களில் நமது மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் பலருக்கும் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் மற்றும் திருத்தம் குறித்த சந்தேகங்களை தீர்த்து வைத்து அவர்களுக்கு உதவினர். அதன்படி தமிழகத்தின் பல்வேறு தொகுதிகளில் உள்ள மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அப்பணியை மேற்கொண்டனர். தொகுதிவாரியாக கீழே உங்களின் பார்வைக்கு இணைக்கபட்டுள்ளது.
சென்னை மண்டலம் : மதுரவாயல் ம.நீ.ம மாவட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்… மதுரவாயில் மநீம மாவட்டம், 150-வது வட்டத்துக்கு உட்பட்ட கிரேஸ் மெட்ரிக் பள்ளி, காரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி, 147-வது வட்டத்துக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஆலம்பாக்கம் தொடக்கப் பள்ளி, 92-வது வட்டத்துக்கு உட்பட்ட முகப்பேர் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, டிஏவி பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் மேற்பார்வையில், மதுரவாயல் மநீம மாவட்டச் செயலாளர் திரு.பாசில் அவர்களின் தலைமையில், மாணவரணி சென்னை மண்டல அமைப்பாளர் திரு. B.சந்துரு, மாவட்ட துணைச் செயலாளர் திரு. G.ராஜேஷ், நற்பணி அணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு. K.S.ரவி, நகரச் செயலாளர்கள் திரு. K.ராமு, திரு. M.மதிவாணன், திரு. M.லட்சுமி சுந்தரராமன், திரு. K.திருமுருகன், வட்டச் செயலாளர் திரு. D.சேதுராமலிங்கம், வட்டச் செயலாளர்கள் திரு. J.L.ராஜகுமார், திரு. V.சுகுமார், கிளைச் செயலாளர்கள் திரு. A.கோவிந்தசாமி, திரு. R.பலராமன், மற்றும் நிர்வாகிகள் திரு. பார்த்திபன், திரு. வெற்றிவேல், திரு. தர்ஷன் உள்ளிட்டோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் தொடர்பாக பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தனர். – மக்கள் நீதி மய்யம்
சென்னை மண்டலம் : சைதாபேட்டை ம.நீ.ம மாவட்டம்
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் பொதுமக்களுக்கு உதவிய மக்கள் நீதி மய்யத்தினர்… சைதாப்பேட்டை மநீம மாவட்டத்திற்கு உட்பட்ட 139,140,142,168,169-வது வார்டுகளின் வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் மேற்பார்வையில், சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு. சைதை ஜெ.கதிர் அவர்கள் தலைமையில், கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் திரு. மோகன்ராஜ், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சஞ்சீவி ராமன், மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபாஷினி, தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சந்தர், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரமேஷ் கண்ணன், மீனவரணி மாவட்ட அமைப்பாளர் திரு. சைதை N.குமார், சைதாப்பேட்டை மகளிரணி மாநகர அமைப்பாளர் திருமதி சித்ரா, வட்டச் செயலாளர்கள் திரு. முத்துக்குமரன், திரு. முரளிதரன், கட்சி நிர்வாகிகள் திரு. சுல்தான் பாய், திரு. ரயில் சண்முகம், திரு. சந்திரன், திரு. சூர்யா, திரு.முருகன், செல்வி. கிருத்திகா, செல்வி. வினோதினி, வழக்கறிஞர்கள் திரு. கோவிந்தராஜுலு, திரு. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் தொடர்பாக வருகைபுரிந்த பொதுமக்களுக்கு, உதவிகளைச் செய்ததுடன், அவர்களுக்கு தேவையான உரிய வழிகாட்டுதல்களையும் வழங்கினார்கள். – மக்கள் நீதி மய்யம்
மதுரை மேற்கு : ம.நீ.ம மாவட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மக்களுக்கு உதவிய மதுரை மேற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர். மதுரை மேற்கு மநீம மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு. I.முத்துகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. சரவணன், வட்டப் பொருளாளர் திரு. அழகர்சாமி, கிளைச் செயலாளர் திரு. செண்பக பிரபு, நிர்வாகிகள் திரு. கருப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவினர். – மக்கள் நீதி மய்யம்
சென்னை மண்டலம் : வில்லிவாக்கம் & கொளத்தூர்
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில், மக்களுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்… வில்லிவாக்கம் மற்றும் கொளத்தூர் மநீம மாவட்டம் 94, 95, 98-வது வார்டுகளுக்கு உட்பட்ட அயன்புரம் தாராப்பூர் மகளிர் மேல்நிலைப் பள்ளி, சிங்காரம் பிள்ளை மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்டச் செயலாளர் திரு. C.கோமகன் அவர்கள் தலைமையில், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை மாநில துணை ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி, வில்லிவாக்கம் மநீம மாவட்டத்தின் மகளிரணி அமைப்பாளர் திரு. ஹேமா உமாபதி, மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு.சிவலிங்கம், திரு. விஸ்வநாதன், மாவட்டப் பொருளாளர் திரு. அரிதாஸ், நகரச் செயலாளர்கள் திரு. சரவணன், திரு. ரமேஷ் காந்தி, வட்டச் செயலாளர்கள் திரு. லட்சுமணன், திரு. கோடீஸ்வரன், கிளைச் செயலாளர்கள் திரு. ரமேஷ், நிர்வாகி திரு. முகேஷ் ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவினர். – மக்கள் நீதி மய்யம்
கோபிசெட்டிபாளையம் :
“கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பொதுமக்களுக்கு உதவி செய்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர். கோபிசெட்டிப்பாளையம் நகராட்சி 23-வது வார்டுக்கு உட்பட்ட வைரவிழா மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த் சிறப்பு முகாம்களில், கோபிசெட்டிபாளையம் மாவட்டச் செயலாளர் திரு. G.C.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்.” – மக்கள் நீதி மய்யம்
சேலம் மண்டலம் :
சேலம் மண்டலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர். சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் மநீம மாவட்டம் சிஎஸ்ஐ பள்ளி, ஜே.கே.கே ரங்கம்மாள் பள்ளி, சங்ககிரி மநீம மாவட்டம் எர்ணாபுரம் ஊராட்சி பள்ளி, காக்காபாளையம் அரசுப்பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள்களில், மகளிரணி குமாரபாளையம் மநீம மாவட்ட அமைப்பாளர் திருமதி. சித்ராபாபு, மகளிரணி ஒன்றிய அமைப்பாளர் திருமதி. மல்லிகா, நிர்வாகிகள் திரு. விமல்ராஜ், திரு. C.S.கணேசன் ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர். – மக்கள் நீதி மய்யம்
சென்னை மண்டலம் : ஹரிநாராயணபுரம் :
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் மக்களுக்கு உதவிய மக்கள் நீதி மய்யம் மாணவர் அணியினர். சென்னை மாநகராட்சியின் 47-வது வார்டு ஹரி நாராயணபுரம் நடுநிலைப் பள்ளி, 147-வது வார்டு ஆலப்பாக்கம் மாநகராட்சி தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி 9-வது வார்டு ஒட்டப்பிடாரம் மாப்பிள்ளையூரணி அரசு தொடக்கப் பள்ளி, விழுப்புரம் 2-வது வார்டு கடலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, 16-வது வார்டு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் மாணவர் அணி மாநிலச் செயலாளர் திரு.ராகேஷ் அவர்கள் ஒருங்கிணைப்பில், மாணவர் அணியின் சென்னை மண்டல அமைப்பாளர் திரு. சந்துரு, விழுப்புரம் மண்டல அமைப்பாளர் திரு. தேவேந்திரன், இராயபுரம் மநீம மாவட்ட அமைப்பாளர் செல்வி. ஜெயந்தி, செஞ்சி மாவட்ட அமைப்பாளர் செல்வி. கீதா, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் திரு. கார்த்திக், ஓட்டப்பிடாரம் மாவட்ட அமைப்பாளர் திரு. அருண் ஜேம்ஸ், நிர்வாகிகள் திரு. பார்த்திபன், திரு. வெற்றிவேல், திரு. சந்துரு உள்ளிட்டோர் இந்த முகாம்களில் பங்கேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உதவினர். – மக்கள் நீதி மய்யம்
சென்னை மண்டலம் : ஆர்.கே.நகர் & ராயபுரம்
வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர்… ஆர்.கே.நகர் மற்றும் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட, 47-வது வார்டில் உள்ள ஹரி நாராயணபுரம் சென்னை மாநகராட்சிப் பள்ளி, 50-வது வார்டில் உள்ள சிஎஸ்ஐ நார்த்விக் பள்ளி வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதலின்படி, கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு.மயில்வாகனன் அவர்களின் மேற்பார்வையில், மாவட்டச் செயலாளர் திரு. D.மாறன் அவர்கள் தலைமையில், தொழிலாளர் அணி ஆர்.கே.நகர் மநீம மாவட்ட அமைப்பாளர் திரு. J.ராம்சேகர், மாணவரணி இராயபுரம் மநீம மாவட்ட அமைப்பாளர் செல்வி D.ஜெயந்தி, மாநகரச் செயலாளர் திரு. A.இக்னேசியஸ், வட்டச் செயலாளர்கள் திரு. A.ஆர்தர் மற்றும் நிர்வாகிகள் திரு. சந்துரு, திரு. A.பாபு, திரு. A.உதயா, திரு. P.பாலகுரு, திரு. கணேசன் ஆகியோர் இந்த முகாம்களில் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தனர். – மக்கள் நீதி மய்யம்
மதுரை – தெற்கு மாவட்டம் ம.நீ.ம மாவட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில், மக்களுக்கு உதவிய மதுரை தெற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர். மதுரை தெற்கு மநீம மாவட்டத்திற்கு உட்பட்ட, 43, 45வது வார்டுகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தெற்கு மநீம மாவட்ட நிர்வாகிகள் திரு. கமல்சக்தி, திரு. ராஜா ஆகியோர் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தப் பணிகளில் பொதுமக்களுக்கு பெரிதும் உதவினர். – மக்கள் நீதி மய்யம்
நாகப்பட்டினம் மாவட்டம்
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பொதுமக்களுக்கு உதவிய மநீம கட்சியினர் நாகை நகராட்சி 27, 28, 29, 30, 31-வது வார்டு மற்றும் ஏனங்குடி ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் அறிவுறுத்தல்படி, இந்த முகாமில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் உள்ளிட்ட பணிகளில் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்தனர். கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் திரு. எம்.எம்.செய்யது அனஸ் அவர்கள், திருமருகல் ஒன்றியச் செயலாளர் திரு. ஜி.பிரான்சிஸ் அவர்கள், நற்பணி இயக்க மாவட்ட அமைப்பாளர் திரு. ஓம்பிரகாஷ் அவர்கள், ஒன்றிய துணைச் செயலாளர் திரு. ரஹ்மத்துல்லாஹ், ஊடகப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் திரு. முருகேசன் அவர்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் இந்த முகாமில் பங்கேற்று, மக்களுக்கு உதவினர். – மக்கள் நீதி மய்யம்
முக்கியக் குறிப்பு : இன்னும் பிற மாவட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பங்கு கொண்ட தகவல்கள் தொகுக்கப்பட்டு இக்கட்டுரையில் விரைவில் இணைக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி : மக்கள் நீதி மய்யம்