பிப்ரவரி 24, 2026

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களால் 2018 ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் தேதியில் மதுரையில் துவக்கப்பட்டது. ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை பல்வேறு மாவட்டங்களில் கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மற்றுமொரு கிளை அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈரோடு – பெருந்துறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழா !

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் 9ஆம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் விதமாக, பெருந்துறையில் புதிய மாவட்ட அலுவலகத்தை,

கோவை மண்டலச் செயலாளர் திரு. ரங்கநாதன் அவர்கள் திறந்து வைத்தார்.

பெருந்துறை மநீம மாவட்டப் பொறுப்பாளர் திரு. P.V.முருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில்,

மாவட்டச் செயலாளர்கள் திரு. சிவக்குமார் (கோபிசெட்டிபாளையம்), திரு. முரளி கிருஷ்ணன் (ஈரோடு மேற்கு), திரு. வரதராஜ் (சூலூர்), திரு. நயினார் (பவானி) மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வட்ட, கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்