ஜனவரி 31,
1948 ஜனவரி 30 ஆம் தேதியன்று எவரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று புது தில்லியில் அமைந்துள்ள பிர்லா ஹவுசில் நடைபெற்றது.
ஆம், தேசத்தின் தந்தை என்று போற்றப்பட்ட அண்ணல் காந்தியடிகள் சுடப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை மூன்று தோட்டாக்கள் துளைத்து எடுக்க வெள்ளையனை எதிர்த்து அஹிம்சை யுத்தம் செய்த ஓர் ஒப்பற்ற தலைவரான காந்தி அவர்களை அந்த உலோகத் தோட்டாக்கள் அமைதியுறச் செய்து விட்டது.
தென்னகம் ம முழுவதும் திராவிடப் பெருஞ்சுவர் தேசத்தின் ஒற்றுமையை இறையாண்மையை கட்டிக் காத்து வருகிறது. சினிமாவும், அரசியலும் இங்கே சம அளவில் மக்களிடையே புழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் திராவிட கருத்துக்கள் உள்ளடக்கிய பல படங்கள் பல்வேறு தலைவர்களை உலகிற்கு தந்துள்ளது. அதற்கான அனைத்து சான்றுகளும் பொதுவெளியில் உள்ளன.
NDTV மற்றும் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற Conclave Summit 2026 இல் தமிழகத்தின் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், பல்வேறு கட்சியின் ஆளுமைகள் உள்ளிட்ட பலரும் உரையாற்றி கேள்விகளுக்கு பதில் வழங்கினார்கள். நிகழ்வின் இறுதி கட்டத்தின் போது மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களிடம் NDTV தமிழக தலைமை ஆசிரியர் திரு.T.M.வீரராகவ் அவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவை அத்தனைக்கும் மிகவும் பொறுமையுடனும், மிகுந்த நுட்பத்துடனும் தனக்கே உரித்தான பதில்களை மிகுந்த சுவைபட வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திரு.கமல்ஹாசன் அவர்கள் எழுதி இயக்கிய காந்தியார் குறித்த ஆவணப் படம் திரையிடப்பட்டது.
நன்றி : மக்கள் நீதி மய்யம்