பிப்ரவரி : 03, 2026

தென்னகத்து காந்தி என்று அழைக்கப்பட்டவர் பேரறிஞர் அண்ணா துரை அவர்கள். திராவிட கோட்பாடுகளை மக்களிடையே முன்னெடுத்துச் சென்று சேர்த்த மிக முக்கிய மூத்த அரசியல் தலைவர். அரசியலில் ஈடுபட்டது முதல் இறுதிவரை அப்பழுக்கற்ற ஓர் அரசியல் களத்தில் வீறு நடை போட்டவர்.

தனது இளம் வயதில் நீதிக் கட்சியில் இணைந்து செயலாற்றி வந்த அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரை தனது தலைவராக ஏற்றுக் கொண்டவர் இந்தி மொழி திணிப்பை ராஜாஜி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்த முயன்றபோது பெரியாருடன் இணைந்து தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அண்ணாவிற்கு பெரும் பங்குண்டு. தமிழகத்தில் வேற்று மொழிகளின் ஆதிக்கம் காலூன்றி விடக்கூடாது என்று மிக உறுதியாக இருந்தார்.

வாக்கரசியலில் ஈடுபாடு கொண்டமையால் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து தமது சக தோழர்களுடன் இணைந்து திராவிடர் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தோற்றுவித்து படிப்படியாக அரசியலை மக்களிடையே கொண்டு சேர்த்து 1967 இல் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார். முதல் தீர்மானமாக சென்னை மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றம் செய்து அரசாணையை வெளியிட்டு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். மிகச்சிறந்த பேச்சாளரும், இதழாளரும் ஆன அண்ணா அவர்கள் இருமொழிக் கொள்கை, சுயமரியாதை திருமணங்கள், கலப்புத் திருமணங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ஆட்சி செய்து வந்த அண்ணா நோய்வாய்ப்பட்டு அயல்நாட்டிற்கு சென்று சிகிச்சைகள் மேற்கொண்டும் சிகிச்சைகள் பலனளிக்காமல் 1969 இயற்கை எய்தினார்.

தமிழகத்தை ஆட்சி செய்த முதல்வர்களில் வரலாற்றில் சிறந்த பெயரெடுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

https://twitter.com/maiamofficial/status/2018583651597066521?s=20

“கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தி, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றுரைத்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாளில், அவரை போற்றிய மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்” – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/2019448366413848739?s=20

‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்றார். ‘மாநிலக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்’ என்று சொல்லி அதை நடத்திக் காட்டினார். ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்கிற முழக்கத்தால் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தினார். இப்பெரும் செயல்களைச் சாதித்த அறிஞர் அண்ணாவின் நினைவு நாள் இன்று. அவரைப் போற்றுவோம். – திரு.கமல்ஹாசன்

நன்றி : மக்கள் நீதி மய்யம்