பிப்ரவரி 07, 2026
கடந்த நான்காம் தேதியன்று பாராளுமன்ற ராஜ்ய சபையில் நடைபெற்ற நிகழ்வின் போது மக்கள் நீதி மய்யம் தலைவரும் ராஜ்ய ரபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் மிக முக்கியமான தகவல் ஒன்றை முன்வைத்தார். அப்போதிருந்து அடுத்தடுத்த நாட்களில் நாடெங்கிலும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் நடைபெற்ற விவாதத்தின்போது நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ் குறித்த தகவல் ஒன்றை தமிழ் கற்றுக் கொண்டால் அதை வைத்து பிச்சை கூட எடுக்க முடியாது என விடுதலை நாளேட்டில் 1943 இல் தந்தை பெரியார் அவர்கள் எழுதியதாக போகிறபோக்கில் பேசிவிட்டு சென்று விட்டார். அப்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற போதிலும் காலப்போக்கில் மறந்து விட்டனர்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் ராஜ்ய சபா உறுப்பினராக உயிரே உறவே தமிழே என்று துவங்கி கமல்ஹாசன் ஆகிய நான் என கர்ஜிக்கும் குரலில் தூய தமிழில் பதவியேற்றார். அதன் பிறகு கேள்வி நேரத்தில் எத்தனால் உள்ள எரிபொருள் நிரப்புவதும் அதனால் பயணிக்கும் தூரமும் என்ஜின்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த மிக முக்கிய கருத்தை முன் வைத்த போதும் அது நாடெங்கிலும் பெரும் விவாதத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
கடந்த நான்காம் தேதியன்று பிரதமர் மற்றும் நிதியமைச்சர் சபைக்கு வரவில்லை எனினும் தனக்கு அளிக்கப்பட்ட நேரத்தில் நிர்மலா சீதாராமன் தமிழ் குறித்து தரக்குறைவாக பேசியதை எடுத்துரைத்து பல்வேறு உதாரணங்களை அடுக்கடுக்காக எடுத்துரைத்து இறுதியாக தமிழை வைத்து தமிழன் எங்கும் பிச்சை எடுக்க மாட்டான் இன்னும் சொல்லப்போனால் உங்களிடம் எந்த தமிழனும் பிச்சையே எடுக்க மாட்டான் என முத்தாய்ப்பாக சொல்லவே நாடு முழுவதும் பெரும் தமிழ் தீ பரவியது. தமிழகம் முழுவதிலும் கமல்ஹாசன் அவர்களின் கருத்திற்கு பெரும் ஆரவாரத்துடன் பகிர்ந்து கொண்டார்கள். இது போன்ற துணிச்சல் மிக்க கருத்தை எந்த தயக்கமுமின்றி எடுத்துரைக்க நம்மவருக்கு நிகர் நம்மவர் மட்டுமே.
திரு.கமல்ஹாசன் அவர்களின் கருத்தினை ஆமோதித்து திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் திரு.கி.வீரமணி அவர்கள், தந்தை பெரியார் பற்றி நிதியமைச்சர் பேசியதற்கு கண்டனமும் விடுதலை நாளேட்டில் பிப்ரவரி 7 ஆம் தேதியன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : மக்கள் நீதி மய்யம் & விடுதலை நாளேடு