பிப்ரவரி 15, 2026

வாச்சாத்தி – இந்த பெயரை இன்று உச்சரித்தாலும் நமது உடலில் அதிர்வலைகள் எழுந்து அமிழும். தருமபுரி அருகில் அமைந்துள்ள ஓர் சிறிய கிராமமே வாச்சாத்தி. 1992 ஜூன் மாதம் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் சுமார் 269 பேர் அந்த கிராமத்தில் நுழைந்து சந்தனைக்கட்டைகள் பதுக்கப்பபட்டுள்ளதாக அறிவித்து ஒவ்வொரு வீடுகளிலும் தேடுதல் வேட்டையை நடத்தினர். சோதனை என்கிற பெயரில் காவலர்கள் கால்நடைகள் மற்றும் வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டனர். மட்டுமல்லாது 18 பெண்களை வன்புணர்வு செய்தனர் அவர்களின் ஓலங்களை வெளியில் கேட்கவிடாமல் செய்ததோடு நில்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களின் மீது பல்வேறு பொய்வழக்குகளை போட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த அநீதிக்கு எதிராக இந்திய கம்மியூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பழங்குடியினர் சங்கம் இணைந்து சட்டப்போராட்டத்தை துவங்கினர். அப்போதைய ஆளும்கட்சி இந்த துயர் சம்பவத்தை மறுத்தும் உச்சநீதிமன்றம் தந்த அழுத்தத்தில் வழக்கு CBI விசாரணைக்கு மாற்றல் ஆனது.

பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் இறுதியில் கிருஷ்ணகிரி நீதிமன்றம் 215 பேருக்கு (விசாரணையின் போது 54 பேர் இறந்துவிட்டனர்) சிறைத்தண்டனை விதித்தது. இதில் 126 பேர் வனத்துறையினர், 84 பேர் காவலர்கள், 5 பேர் வருவாய்த்துறையினர்.

கிருஷ்ணகிரி கீழ் கோர்ட்டில் அளிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். ஆயினும் 2023 இல் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதி செய்ததோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டது.

உயர்பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகளும் காவல்துறையினர் ஆகியோரின் தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். மேலும் 17 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு பத்தாண்டுகள் சிறைத்தண்டனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அரசு அதிகாரிகளே ஒட்டுமொத்தமாக ஓர் கிராமத்தில் இவ்வளவு பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டதும் அதெற்கென தண்டனையை பெற்றதும் முக்கியமான வழக்காகும்.

முதல் படம் : வாச்சாத்தி கிராம மக்கள் இரண்டாவது படம் : நீதியரசர் திரு.வேல்முருகன் அவர்கள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வினை மேற்கொண்ட போது.

ஆண்டுகளாக நடைபெற்று வந்த சட்டப் போராட்டத்தின் வழியாக கிடைக்கபெற்ற நீதி குறித்தும் இந்த வழக்கின் வரலாற்று சம்பவங்களை வாச்சாத்தி எனும் ஆவணப் படமாக தயாரித்து வெளியிடுகிறது காம்ரேட் டாக்கிஸ் நிறுவனம். மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் ஆவணப் படத்தினை வெளியிட்டு, அங்கே குழுமியிருந்த வாச்சாத்தி கிராம மக்களிடையே உரையாற்றினார். பெருந்துயரான சம்பவத்தை அதன் பாதிப்புகளை மற்றும் அதில் சிக்குண்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்ட கிராமத்து மக்களை இந்த இன்னலில் இருந்து மீண்டு வந்தது பெரும் போராட்டம் எனவும் அதில் உண்டான பாதிப்புகளை புறந்தள்ளி இன்னும் உங்கள் வாழ்வை மேம்பட்டதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனவும், சட்டப் போராட்டத்தில் உங்களுக்கு நீதி கால தாமதமாக கிடைத்தாலும் அதற்காக விடாமல் போராடியது போற்றத்தக்கது. சட்டபோராட்டத்தை திறம்பட நடத்திய குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்தும் வழங்கியதோடு, ஆவணப் படத்தினை வடிவமைத்து தயாரித்து இயக்கி வெளியிடும் காம்ரேட் டாக்கிஸ் குழுவினருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தார்.

படங்கள் : கோப்பு படம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்

Vachathi #KamalHaasan #JusticeForVachathi #VachathiDocumentary #SocialJustice #TamilNews #கமல்ஹாசன் #வாச்சாத்தி