பிப்ரவரி – 15, 2026


தமிழ் இலக்கியத்தின் உலகளாவிய அங்கீகாரம் – கமல்ஹாசன்

இலக்கியம், வெகுஜன யதார்த்த மொழியியல், நாவல், ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட அணைத்து நூல்களையும் வாசிப்பதில் அலாதி பிரியம் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு. பிரபல திரைக்கலைஞராக இருந்த போதிலும் தனது புத்தக வாசிப்பை என்றும் நிறுத்தியதில்லை என்பதற்கு பல்வேறு எழுத்தாளர்களும் தங்களுக்கும் திரு.கமல்ஹாசன் அவர்களுடனான உரையாடல்கள் குறித்த பல்வேறு நேர்காணல்கள் இலக்கிய இதழ்கள், செய்திதாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என எங்கும் காணக்கிடைக்கிறது.

நூல்களின் வாசிப்பானுபவம் குறித்து எப்போதும் சிலாகித்து பேசி வருபவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் என்பது தெள்ளத் தெரிந்த ஓர் தகவல். திரைவிழாக்கள், தொலைகாட்சி நிகழ்சிகள், நேர்காணல்கள் மற்றும் அரசியல் மேடைகள் என எங்கும் நூல்கள் வாசிப்பின் பயன்கள் அதன் எதிரொலிகள், தொடர்ச்சியாக வாசிப்பது என தனது எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை உச்சரித்து வருகிறார்.

மரபு இலக்கியங்கள் மற்றும் நவீன இலக்கியங்கள், கவிதைகள் என அனைத்திலும் தனது முத்தாய்ப்பான கருத்துக்களை வைத்து வருவதை தொடர்ந்து நமது இலக்கியங்கள் உள்ளிட்ட படைப்புகள் மற்றும் அதன் படைப்பாளிகள் என அனைவரும் உலக அரங்கில் பாராட்டபட வேண்டும் என்பதும் அதற்கான முன்னெடுப்பை எழுத்தாளரான திரு.ஜெயமோகன் அவர்கள் முன்னெடுப்பில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பின் சார்பில் அமெரிக்கா நியூயார்க் நகரில் ‘Living Tamil LitFest’ நடைபெறவிருக்கிறது. அதன் தொடர்பாக திரு.கமல்ஹாசன் அவர்கள் இன்று நிகழ்வை பாராட்டி உரையாற்றியுள்ளார்.

அயல்நாடுகளின் எழுத்தாளர்களை அவர்களது படைப்புகளை வெகுவாக புகழ்ந்து போற்றும் நாம் நமது நவீன இலக்கியம் மற்றும் எழுத்தாளர்களை போற்றத் தவறியதாக அறிய நேர்கிறது. மாறாக அப்படி இலக்கியங்களை, நூல்களை போற்றுவதால் ஏற்படும் சமூக மாற்றங்கள் என்ன என்பதை மிகச்சுருக்கமாக வாசகர்களாகிய உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

நமது நவீன இலக்கியச் சாதனைகளை உலகம் இன்னும் முழுமையாக அறியவில்லை. நமது படைப்புகள் பிற நாடுகளுக்குச் சென்றால் என்ன நன்மைகள் விளையும் ? இதோ சில காரணங்கள் :

பண்பாட்டுப் பரிமாற்றம் : நாம் உலகையும், உலகம் நம்மையும் ஆழமாகப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.

மொழியாக்கத்தின் வலிமை : ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததால்தான் இன்று உலக அறிஞர்கள் அதனை மேற்கோள் காட்டுகின்றனர்.

பிம்பங்கள் உடையும் : தமிழ் இலக்கியம் உலக அரங்கிற்குச் செல்லும்போது, நம்மைப் பற்றிய தவறான பிம்பங்கள் மறையும்.

“நமது இலக்கியச் சாதனைகளை உலகிற்கு எடுத்துச் செல்லத் தவறிவிட்டோம். மொழியாக்கம் மூலமாகப் புதுமைப்பித்தன் முதல் அசோகமித்திரன் வரை உலக அரங்கு கொண்டாட வேண்டிய நேரம் இது.”

“உலகம் தமிழையும், தமிழ் உலகையும் புரிந்துகொள்ளப் பண்பாட்டுப் பரிமாற்றம் அவசியம்! ஜி.யு. போப் திருக்குறளுக்குச் செய்தது போல, நமது நவீன இலக்கியங்களும் எல்லை கடக்க வேண்டும்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் – ‘Living Tamil LitFest’ நிச்சயம் வெற்றி பெறும்.

“அமெரிக்காவின் நியூயார்க் நகரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தும் ‘Living Tamil LitFest’ குறித்து தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் அறிமுக உரை.” – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்.