ஜனவரி : 22, 2026
கடந்த 2018 ஆண்டில் நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியை துவக்கினார். கடந்த 2019 ஆண்டில் பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 இல் சட்டமன்ற தேர்தல் மற்றும் 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆகிய தேர்தல்களில் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கிய சின்னமான டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்று மூன்றாம் இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட தலைவர் அவர்கள் சூழ்ச்சியின் காரணமாக வெற்றியை தவற விட வேண்டியதாயிற்று.
மேலும் கடந்த 2024 ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையம் மூலம் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்ட போதும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணியில் இணைந்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தேர்தல் பரப்புரை செய்தார் தலைவர் அவர்கள்.
இந்நிலையில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல் களம் தமிழகத்தில் சூடு பிடித்துள்ள நிலையில் பல கட்சிகள் கூட்டணியில் இடம்பிடிக்க காய்களை நகர்த்தி வருகிறது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியும் கணிசமான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றியை பெறும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மக்கள் நீதி மய்யம் தங்களுக்கு டார்ச்லைட் சின்னம் தரும்படி விண்ணப்பம் அளித்தது. தேர்தல் ஆணையம் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து இன்று டார்ச்லைட் சின்னத்தினை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
“2026 சட்டமன்றத் தேர்தல் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு.” – மக்கள் நீதி மய்யம்
