ஜனவரி 15, 2026

பழந்தமிழர் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தைத்திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. மண், மழை, சூரியன் என இயற்கை வளங்ககளுக்கும் உடல், பொருள், உழைப்பு, இரத்தம், சதை என லாபமில்லாமல் போனாலும் பிற உயிர்களுக்கு உணவு தருவதை என்றும் விடாத விவசாய மக்களுக்கு நன்றி சொல்வதாக கருதப்படுவதே பொங்கல் திருநாள் விழாவாகும்.

இயற்கையின் கொடையை நம்பும் மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான் திரு.கமல்ஹாசன் அவர்கள் விவசாயிகள் தான் நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொன்ன காந்தியார் வழியில் என்றும் உழவர்களை போற்றுவார் என்பதில் எத்தகைய ஐயமும் இல்லை. பொங்கல் திருநாளான இன்று தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பொங்கல் திருநாள் குறித்து வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

“தமிழர் பண்பாட்டின் சிகரமெனக் கொண்டாடப்படும் திருநாள் பொங்கல். இயற்கைக்கும் உழவுக்கும் நன்றி பாராட்டும் இந்நன்னாளில் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும்; இதயங்கள் இனிமையால் நிறையட்டும். தமிழ் மண்ணின் செழுமையும், தமிழரின் பெருமையும் உலகெங்கும் ஓங்கி ஒலிக்கட்டும். தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்”. – திரு.கமல்ஹாசன், MP – தலைவர் மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/2011797179141407123?s=20

நன்றி : மக்கள் நீதி மய்யம்