சேலம் : டிசம்பர் 12, 2024
சேலம் மண்டலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மண்டல நிர்வாகிகள் மத்தியில் பேருந்து நிலையம் எதிரில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் சேலம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களது வழிகாட்டுதல்படி, சேலம் மண்டலத்தில் பல்வேறு இடங்களில் கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சேலம் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. இஸ்மாயில், மாநகரச் செயலாளர் திரு. சரவணன், தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு. கம்பர் முன்னிலை வகித்தனர்.
இதில், பல்வேறு பொறுப்புகளுக்கான விண்ணப்பங்களை திரு. ராமச்சந்திரன், திருமதி மனீஷா, திரு. ரவிக்குமார், திரு. கேசவன், திரு. பூபதி, திரு. சஞ்சய், திரு. சுப்பிரமணியன், திரு. நாகரத்தினம் ஆகியோர் மண்டலச் செயலாளர் திரு. கே.காமராஜ் அவர்களிடம் வழங்கினர். மேட்டூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அரங்கனூரில் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் திரு. குமார், மேச்சேரி ஒன்றியச் செயலாளர் திரு. குமரன் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலாளர் திரு. கே.காமராஜ், பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பென்சில்கள் வழங்கினார்.
கூட்டத்தில் சேலம் மாநகரச் செயலாளர் திரு. சரவணன், தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு. கம்பர் ரவிக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. சதீஷ், நகரச் செயலாளர் திரு. கண்ணன், ஊராட்சி செயலாளர்கள் திரு. சரவணன், திரு. மகாலிங்கம் மற்றும் திரு. அசோக் லட்சுமணன், திரு. முனுசாமி, திரு. விக்ரம், திரு. மணிமுத்து, திரு. அரவிந்த், திரு. ஆசைத்தம்பி, திரு. சபரி, திரு. வெங்கட்ராமன், திரு. சூர்யா, திரு. செந்தில் அங்கமுத்து, திரு. புகழ், திரு. பிரபு, திரு. செந்தில், திரு. ராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஓமலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், நகரச் செயலாளர் திரு. காதர்பாஷா தலைமையில் ஓமலூரில் நடைபெற்றது.
மண்டலச் செயலாளர் திரு. கே.காமராஜ் தலைமை வகித்தார். நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் திரு. சுரேஷ், ஊடக அணி மாவட்ட அமைப்பாளர் திரு. செல்லப்பிள்ளை, சேலம் மாநகரச் செயலாளர் திரு. சரவணன், தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு. கம்பர் ரவிக்குமார், திரு. சரவணன், திரு. முருகேசன், திரு. கருப்புனபட்டி விஸ்வநாதன், திரு. கோவிந்தராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சேலம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தாதகாப்பட்டி சண்முகா நகரில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர் திரு. கே.காமராஜ் தலைமை வகித்தார். தெற்கு தொகுதி நிர்வாகிகள் திரு. சஞ்சய், திரு. கம்பர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநகரச் செயலாளர் திரு. V.S.சரவணன், மேச்சேரி ஒன்றியச் செயலாளர் திரு. ப.குமரன் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் திரு. சத்தியமூர்த்தி, நகரச் செயலாளர் திரு. M.மோகன், நற்பணி அமைப்பு மாவட்ட அமைப்பாளர் திரு. S.R.ரவி, நகர அமைப்பாளர் திரு. G.அம்ஜத்கான், நகரச் செயலாளர்கள் திரு. R.ரவிக்குமார், திரு. G.சீனிவாசன், வட்டச் செயலாளர்கள் திரு. G.முருகன், திரு. A.நாகேந்திரன், திரு. வரதராஜன், கிளைச் செயலாளர்கள் திரு. A.லியாகத் அலிகான், திரு. V.ரவிக்குமார், திரு. M.சேகர், நிர்வாகிகள் திரு. E.குணா, திரு. M.ரவி, திரு. S.நாகரத்தினம், திரு. K.சுப்பரமணி, திரு. சீ.நிதின்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு. இஸ்மாயில் நன்றி கூறினார்.
வீரபாண்டி, சங்ககிரி, எடப்பாடி மாவட்டங்களின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இடங்கனசாலை நகரச் செயலாளர் திரு. கமல் ரவி இல்லத்தில் நடைபெற்றது. மண்டலச் செயலாளர் திரு. கே.காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் திரு. D.தாசப்பராஜ் முன்னிலை வகித்தார். இடங்கணசாலை நகரச் செயலாளர்கள் பொறுப்புக்கு திரு. சே.ஈஸ்வரன், திரு. நா.வரதராஜப் பெருமாள் ஆகியோர் விண்ணப்பங்களை வழங்கினர். இந்தக் கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் திரு. பூபதி, நற்பணி அணி சங்ககிரி மாவட்ட அமைப்பாளர் திரு. விமல்ராஜ், இடங்கணசாலை நகரச் செயலாளர் திரு. கமல் ரவி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி திரு. சத்தியமூர்த்தி, நற்பணி அணி நகர அமைப்பாளர் திரு. சேகர், ஊராட்சி செயலாளர்கள் திரு. வெங்கட்ராமன், திரு. கணேசன், திரு. செளந்தர், திரு. சதீஷ், திரு. அவினாஷ் ரவி, திருமதி தெய்வானை, திருமதி சுமதி, திரு. மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டங்களில் கட்சி வளர்ச்சிப் பணிகள், பூத் கமிட்டிகள் அமைத்தல், புதிய நிர்வாகிகள் நியமனம், காலியாக உள்ள பொறுப்பாளர் பதவிகளை நியமித்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன. – மக்கள் நீதி மய்யம்
#KamalHaasan #MakkalNeedhiMaiam
நன்றி : மக்கள் நீதி மய்யம்