டிசம்பர் 19, 2024

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திட்டத்திற்கான அரசியல் சாசனத்தில் 129 ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மதியத்திற்கு மேல் தாக்கல் செய்தார். அதன் மீது வாக்கெடுப்பும் நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெற்ற போதே இருபது பாஜக உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட திருத்த மசோதாவிற்கு திமுக, பகுஜன் சமாஜ்வாடி, காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் யாவும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்கு தேசம் பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. நேற்றைய விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா பேசுகையில் இங்கே பலரும் தங்களின் பேச்சினூடே எப்போது பார்த்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் என அவரது பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் சொர்கத்திற்கு போகலாம் என்று குறிப்பிட்டார். அவரது பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சியனர் மேஜையை தட்டி எதிர்ப்பை காண்பித்தனர். அதனை உணர்ந்த உள்துறை அமைச்சர் சமாளித்து எதையோ பேசினார். பாஜக உள்துறை அமைச்சரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய பேச்சிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் வீசத் தொடங்கியது. எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது அளப்பரிய நம்பிக்கையும் பற்றும் வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் மத்திய உள்துறை அமைச்சரின் போக்கினை எதிர்த்து சாடியுள்ளார்.

“Ambedkar’s ideas are the building block on which modern India is built. While Gandhiji freed India from foreign oppression, Dr. Ambedkar liberated India from its own ancient shackles of social injustice.

Every Indian who proudly believes and fights for Babasaheb’s vision of free and just India, where all are born equal, will never tolerate the great man’s legacy to be tarnished. As a modern and moral global power, we should commemorate 75 years of the adoption of our Constitution with a meaningful discussion, debate, and dissection of Ambedkar’s ideas in the esteemed halls of Parliament.

These ideas should inspire progress rather than be misused to offend the sentiments of his followers, among whom I am proud to count myself.”

“நவீன இந்தியாவின் கட்டுமானத்துக்கு பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் சிந்தனையே அடித்தளம். அன்னியர்களின் அடக்குமுறையிலிருந்து இந்தியாவை காந்திஜி விடுவித்த தருணத்தில், இந்தியா தனக்குத்தானே சுமத்திக் கொண்டிருந்த சமூக அநீதிகளிலிருந்து டாக்டர் அம்பேத்கர்தான் இந்தியாவை விடுவித்தார்.

அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் சம நீதி, பிறப்பால் அனைவரும் சமம் என்னும் பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கையை நம்பி அதற்காகப் போராடும் எந்த இந்தியரும், அப்பெருமகனின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை சகித்துக் கொள்ள மாட்டார்.

நவீனத்துவமும் தார்மீகமும் கொண்ட சர்வதேச சக்தியான நாம், அரசியல் சாசனம் உருக்கொண்டதன் 75ஆம் ஆண்டை அர்த்தமுள்ள உரையாடல்கள், விவாதங்கள், அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றிய ஆய்வுகள் என்று நாடாளுமன்றத்தின் மரியாதை மிக்க அரங்குகளை நடத்திச் செல்ல வேண்டும். இந்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது.

திரு.கமல்ஹாசன், தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/maiamofficial/status/1869638808528199942

https://twitter.com/MaiamOfficialIT/status/1869586210789994738

https://twitter.com/MouryaMNM/status/1869624054052991300

நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்தி இணையதளங்கள், சமூக ஊடகம்