டிசம்பர் 20, 2024
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் கொள்கைகள் கோட்பாடுகள் குறித்து அறிந்து கொண்டு நடுவுநிலமை கொண்ட அரசியலை கொண்டு மக்களுக்கான சேவையில் இறங்கிட இளைஞர்கள் தயாராக உள்ளனர் என்பதற்கு சாட்சியாக ஏற்காடு தொகுதியில் முப்பது இளைஞர்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
“மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்த ஏற்காடு தொகுதி இளைஞர்கள்.
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில், ஏற்காடு ம.நீ.ம. மாவட்டம் உடையாபட்டி பகுதியைச் சேர்ந்த 30 இளைஞர்கள், திரு. நிதின் அவர்கள் தலைமையில், சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ் அவர்கள் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நற்பணி அணியைச் சேர்ந்த திரு. இஸ்மாயில் மற்றும் மேச்சேரி ஒன்றியச் செயலாளர் திரு. குமரன் ஆகியோர் செய்திருந்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்