சென்னை : மார்ச் 20, 2025

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் நிர்வாக்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூடும் கூட்டம் வரும் சனிக்கிழமையன்று (22.03.2025) கட்சியின் தலைமை நிலையத்தில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/maiamofficial/status/1902638433136505150

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையில், கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் வரும் 22-03-2025 சனிக்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

காலை சுமார் 10:30 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொள்கிறார்கள். இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் திரு.அருணாச்சலம் அவர்கள் வெளியிட்டுள்ளார். – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1903098715453227384

நன்றி : மக்கள் நீதி மய்யம்