திருப்பரங்குன்றம் : மே 08, 2025
தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில் இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிரணி சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.


தமிழகம் முழுவதும் தொழிலாளர்கள் நலனுக்காக மே தினம் கொண்டாடப்பட்டது. அவ்வகையில் தூய்மைப் பணியாளர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள கட்சியான மக்கள் நீதி மய்யம் மகளிரணியினர் மாநிலச்செயலாளர் திருமதி.பத்மா ரவிச்சந்திரன், மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.அன்பு கலை ஆகியோர் முக்கிய பங்கு வகிக்க நல உதவி விழா சிறப்பாக நடைபெற்றது.


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, திருப்பரங்குன்றம் தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் அளிக்கப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் மகளிர் அணி திருப்பரங்குன்றம் மாவட்ட அமைப்பாளர் திருமதி. லீலாவதி அவர்களின் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு நல உதவிகள் அளிக்கப்பட்டன.
நிகழ்வில் மகளிர் அணி மாநிலச் செயலாளர் திருமதி.பத்மா ரவிச்சந்திரன் (மதுரை & நெல்லை மண்டலம்), மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி.கலை அன்பு, மாவட்ட அமைப்பாளர் திருமதி. உமாராணி, திருப்பரங்குன்றம் மநீம மாவட்டச் செயலாளர் திரு. சிவகுமார், நிர்வாகிகள் திரு. முனியாண்டி, திரு. சாரதி, திரு. வாசுபாஸ்கரன், திருமதி. உமையாள், திருமதி. ராஜலெட்சமி, திருமதி. சாந்தி செந்தில், திருமதி. சுகுணா, திருமதி. சிவகாமி, திருமதி. முத்துலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மகளிரணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. லீலாவதி அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருப்பரங்குன்றம் கிழக்கு ஒன்றிய துணை மாவட்டச் செயலாளர் பெருங்குடி திரு. டி.ராஜேந்திரன் அவர்களும், திருப்பரங்குன்றம் தொகுதி ஊராட்சி தலைவர் பெருங்குடி திரு. எம். செந்தில்குமார் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு நிகழ்வுக்குச் சிறப்பு சேர்த்தனர். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்