மார்ச் 22, 2026
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT Wing நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை திமுக அலுவலகமான அண்ணா அறிவாலையத்தில் இன்று நடைபெற்றது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளான CPI, SDPI, IUML, CPM, விசிக, மனித நேய மக்கள் கட்சி மற்றும் நமது மக்கள் நீதி மய்யம் கலந்து கொண்டனர்.


வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி சமூக ஊடக அணியின் பங்களிப்புகள் என்ன என்பதை கலந்துரையாடி கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தினை திமுக சமூக ஊடக அணியின் மாநில செயலாளரும் தொழில்துறை அமைச்சருமான திரு.T.R.B. ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் சமூக ஊடக அணியின் மாநில செயலாளர் திரு.R.லக்ஷ்மன் மற்றும் திருச்சி மண்டல அமைப்பாளர் திரு.K. செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று தத்தமது கருத்துகளையும் ஆலோசனைகளையும் பரிமாறிக் கொண்டனர்.
இன்று (22-03-2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில்,
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் IT wing நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்,
திமுக IT WING மாநிலச் செயலாளரும், மாண்புமிகு தொழில்துறை அமைச்சருமான திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி., அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கட்சியின் சமூக ஊடக அணி மாநிலச் செயலாளர் திரு. லக்ஷ்மன், மண்டல அமைப்பாளர் திரு. செந்தில் குமார் ஆகியோருடன்,
திமுக, காங்கிரஸ், CPI, SDPI, விசிக, தேமுதிக, மதிமுக, IUML, மனிதநேய மக்கள் கட்சி, CPM உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், IT wing நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஊக்கப்படுத்தி, வாழ்த்துகளைத் தெரிவித்தார். – மக்கள் நீதி மய்யம்


நன்றி : மக்கள் நீதி மய்யம்