12 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்கட்சியாக இருந்தபோதும் கண்டு கொள்ளப்படாத கிடப்பில் போடப்பட்ட சட்டதிருத்தத்தை கையில் எடுத்து கத்தியின்றி இரத்தமின்றி தனது மானசீக குருவாகப் பார்க்கும் அண்ணல் மகாத்மாவின் அஹிம்சை வழியில் எவருக்கும் பாதிப்பில்லாமல் ஆனால் உபயோகம் மிக்க ஓர் மிகச்சிறந்த யுத்தத்தை செய்து முடித்துள்ளார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் உடன் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள், நிர்வாகிகள் புடை சூழ.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மூலை முடுக்கெல்லாம் அரசின் திட்டப்பணிகள் எதுவும் தவற விடாமல் மக்கள் பயனடையவும், அத்திட்டங்களை செயல்படுத்தும் உள்ளாட்சி அமைப்புகள் சரிவர இயங்குகிறதா அதன் நிதி நிலைகள், வரவு செலவுகள் நிகழ்த்திய பணிகள் நிகழ வேண்டிய பணிகள் என எல்லாவற்றையும் மக்களுக்கு எந்த வித ஒளிவுமறைவின்றி தெரிவிக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கடமை.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல எல்லாவற்றையும் படித்தோ பார்த்தோ முழுவதும் தெரிந்தும் உணர்ந்தும் கொள்ள முடியாது ஏன் என்றால் கிராம சபை, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி என்பன எல்லாம் அப்பகுதியை சேர்ந்த மக்களை ஒருமித்த இடத்தில கூட்டி உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை கணக்கு வழக்குகளை பொதுவெளியில் விளக்கமளித்தால் வெகு ஜன மக்களுக்கு சுலபமாய் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
இப்போதைய ஆளும் திமுக அரசு 2010 இல் தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (திருத்தம்) சட்டம் 2010 எண். 35 இயற்றியது 02-12-2010 தேதியிட்ட அரசிதழில் வெளியானது ஆயினும் அதற்கு பிந்தையஅதிமுக அரசும் அதனை கண்டுகொள்ள வில்லை. இதனை இப்படியே விட்டு வைப்பது வெளிப்படைத்தன்மையை நீர்த்துப்போக செய்துவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்த மக்கள் நீதி மய்யம் இதற்கான தீர்வினை ஆவண செய்து தருமாறு தொடர்ந்து தமிழக அரசினை வலியுறுத்தி கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தமிழக அரசின் தலைமைச்செயலர் அவர்களிடம் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி அன்று தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள் தலைமையில் அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் இதர மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை இதே போன்று மனுக்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்க உத்தரவிட்டார்.
அதன் எதிரொலியாக தமிழக அரசின் மாண்புமிகு முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோரிக்கைகளை அதன் அவசியம் உணர்ந்து கிராம சபை போன்றே மாநகராட்சி, நகராட்சிகளில் மக்கள் சபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை தவறாமல் தேவையான காலங்களில் நடத்திட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
“எங்களின் வெற்றி சற்றே தள்ளிப் போய் இருக்கிறது விரைவில் நாளை நமதாகும். நாங்கள் மக்களுக்கான தூய நேர்மையான அரசியலை மட்டுமல்லாது மக்களுக்கான நல்ல திட்டங்களை முன்னெடுக்க வெற்றிகளையும் அதிகாரங்களையும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் ஆயினும் தொடர்ந்து மக்களுக்கான பணிகளை செய்து முடிப்போம் அவர்களின் உரிமையை அவர்களின் குரலாக என்றும் ஒலிக்கும் மக்கள் நீதி மய்யம் மூலமாக என்று அழுத்தந்த்திருத்தமாக உணர்த்தியிருக்கிறார் தலைவர் திரு கமல்ஹாசன் அவர்கள்.
மக்கள் நீதி மய்யம் அனைத்து நிர்வாகிகள் தங்கள் ஒட்டுமொத்த உழைப்பினை நல்கி வருகிறார்கள் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகள், வாழ்த்துகள் பாராட்டுக்கள், ஊர் கூடி தேர் இழுப்போம் நாளை நமதாகும் நம் தமிழகமும் மக்கள் நலனும் வளமாகும்.


கிராம சபை, நகர சபை, வார்டு கமிட்டி அமைக்கக் கோரி களத்தில் போராடிய மக்கள் நீதி மய்யம், உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக இதுவரை கடந்து வந்த பாதை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ம.நீ.ம வின் வாக்குறுதிகளை வெளியிட்டார் தலைவர் கமல்ஹாசன்.
ஏரியா சபை/வார்டு சபை அமைக்கக் கோரி தலைமைச் செயலகத்தில் தலைவர் மனு அளித்தார்.
மக்களுக்காக, மக்கள் பணியில் – ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்க வேண்டும்- மய்யம்
ஏரியா சபை, வார்டு கமிட்டி – நகராத தேர், அசைத்த மய்யம்
https://youtube.com/shorts/l4EA4fdfWcc?feature=share
நகர சபை வார்டு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு நினைவுபடுத்தி வந்தது மக்கள் நீதி மய்யம் அதன் கோர்வையாக தலைவர் அவர்கள் வெளியிட்ட டிவிட்.
