அக்டோபர் 20, 2025

தேசிய விழாக்களைப் போன்றே மனதிற்கு மிக மகிழ்வும் புத்துணர்வும் தரும் தீபாவளி பண்டிகை சிறுவர் முதல் மூத்தோர் வரை யாவருக்கும் மகிழ்ச்சியை அள்ளித் தரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாட்டின் முழுமைக்கும் ஜொலிக்கும் தீப ஒளி நாளான இந்நாளில் அனைவருக்கும் நலமே சூழ்கவென உளமார வாழ்த்துகிறார் மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள்.

https://twitter.com/ikamalhaasan/status/1980106679741268186

“ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள்; தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக.” – திரு.கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் தீபாவளி வாழ்த்துகள். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #HappyDiwali

நன்றி : மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் மாண்புமிகு நம்மவர் டாக்டர் திரு.கமல்ஹாசன், MP, அவர்களுக்கு, துணைத் தலைவர்கள், பொதுச்செயலாளர், மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் மய்யத்தமிழர்கள் வாசக பெருமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள் – என்றும் ப்ரியங்களுடன் மய்யத்தமிழர்கள்.COM