சென்னை 21, 2025

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரான திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமையேற்க சென்னை ராஜா அண்ணாமலைபுரம், துர்காபாய் தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள முத்தமிழ் பேரவை அரங்கினுள் நடைபெற்றது. நான்காவது நாளான இன்று பிற்பகல் நடைபெற்ற அமர்வில் சேலம் மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் பங்கேற்க செய்தித் தொடர்பு மாநில செயலாளர் அவர்கள் முன்னுரை வழங்கி தொடங்கி வைக்க, துணைத்தலைவர்கள் வரவேற்புரை அளித்து மண்டலச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தத்தமது தொகுதியில் செய்து முடித்த பணிகள் குறித்தும் செய்யவிருக்கும் பணிகள் குறித்தும் தகவல்களை தலைவர் முன்னிலையில் சமர்ப்பித்தனர். பின்னர் தலைவரின் எழுச்சியுரை அதில் எவ்வளவோ அர்த்தம் பொதிந்த தகவல்கள், அரசியலில் அதன் களத்தில் எப்படி எவ்வாறு பயணிக்க வேண்டுமென ஆலோசனைகள் வழங்கியும் நிகழ்ச்சியினை நிறைவு செய்தார். மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் நிகழ்வு குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளது.

“2026 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் தொடர்பான சேலம் மண்டலம் மற்றும் புதுச்சேரி மாநில நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம்,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் தலைமையில், நேற்று (21.09.2025) சென்னை முத்தமிழ்ப் பேரவை அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், கட்சியின் நிர்வாகிகளிடையே சிறப்புரையாற்றினார்.

முன்னதாக சேலம் மண்டலச் செயலாளர் திரு. K.காமராஜ், சேலம் மண்டலத்தின் மாவட்டச் செயலாளர்கள் திரு. J.ஜெயபிரகாஷ், திரு. D. தாசப்பராஜ், திரு. C.A.மணிவண்ணன், திரு. A.நிஜாமுதீன், திரு. R.வடிவேல், திரு. S.ஆதாம்பாரூக், அணிகளின் சேலம் மண்டல அமைப்பாளர்கள் திரு. K.முகமது இஸ்மாயில், திரு. S.செந்தில் குமார், புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் திரு. G.R. சந்திரமோகன், புறநகர பொதுச் செயலாளர் திரு. ப.முருகேசன், மாநிலச் செயலாளர் திரு. S.சக்திவேல், வடக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர் திரு. R.பழனிவேலன், தொகுதி செயலாளர்கள் திரு. P.கோபாலகிருஷ்ணன், திரு. கலிவரதன், திரு. R.P. ராமன், திருமதி. சத்யா, திரு. R.தென்னரசு, திரு. A.அய்யனார், திரு. V.சிவகுமார், காலாப்பட்டு தொகுதி பொறுப்பாளர் திருமதி. சசிகலா, புதுச்சேரி மாநில அணிகளின் அமைப்பாளர்கள் திரு. N.T.பசுபதி, திரு. B.ஞான ஒளி, திரு. B.முருகன், திரு. R.C.ஜெயச்சந்திரன், திருமதி. செல்வி, திருமதி. ஜெயந்தி சந்திரமோகன், துணை அமைப்பளர்கள் திருமதி. S.மல்லிகா, திரு. மோகன் ஹாசன் ஆகியோர் தங்களின் தொகுதி கள நிலவரங்கள் குறித்து, தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.

இந்தக் கலந்தாலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G.மௌரியா IPS (Retd) அவர்கள், திரு. தங்கவேலு அவர்கள், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. முரளி அப்பாஸ், திரு. G.நாகராஜன், திருமதி. மூகாம்பிகா இரத்தினம், திரு. S.B.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன், திரு. தட்சிணாமூர்த்தி, திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. R.லக்ஷ்மன், திருமதி. பத்மா ரவிச்சந்திரன், திரு. பன்னீர் செல்வம், திரு. E.T.அரவிந்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, வட்ட, கிளை செயலாளர்கள், அமைப்பாளர்கள் முதலானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.”

#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #Elections2026

நன்றி : மக்கள் நீதி மய்யம்