கரூர் : செப்டம்பர் 29, 2025

கடந்த 27 ஆம் தேதியன்று ஓர் அரசியல் கட்சியின் தலைவர் வருகையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்குண்டு பாதிப்படைந்த பொதுமக்களில் பலரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திரு.கமல்ஹாசன் அவர்கள் வழிகாட்டுதல்படி கட்சியின் துணைத்தலைவர் திரு.தங்கவேலு அவர்களின் தலைமையில் மாநில செயலாளர்கள், மண்டல செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கொண்ட குழுவினர் மேற்படி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர் மேலும் மருத்துவ நிபுணர்களை சந்தித்து அவர்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை,

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,

கட்சியின் துணைத் தலைவர் திரு.தங்கவேலு அவர்களின் தலைமையில், விவசாய அணி மாநில செயலாளர் டாக்டர் G. மயில்சாமி, கோவை மண்டல செயலாளர் திரு.ரங்கநாதன், மாவட்ட செயலாளர்கள் திரு.மோகன் ராஜ், திரு.வரதராஜன், திரு.ஜீவா, திரு.முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் திரு.செந்தில்குமார், நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் திரு.ரவிந்திரன், நகரச் செயலாளர்கள் திரு.கண்ணன். திரு.சக்திவேல், தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் திரு.திருமுருகன், வட்டச் செயலாளர் திரு.மேகி முருகேசன் மற்றும் திரு.சேலம் செந்தில், திரு.ராஜா. திரு.ஆனந்த். திரு.பூபதி. திரு.கண்ணன். திரு.செஸ் சிவா, திரு.ரமேஷ், திரு.மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து, ஆறுதல் தெரிவித்தனர்.

மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை முறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்பதை உறுதி செய்தனர். – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்