செப்டம்பர் : 15, 2025

தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் தலைவர்களில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தவிர்க்க முடியாத நபர். திராவிடர் கழகத்தில் இணைந்திருந்த போதும் அதற்கு பிறகு 1949 இல் சக தோழர்களுடன் இணைந்து துவங்கிய திராவிடர் முனேற்ற கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தியது, காங்கிரஸ் ஆட்சியின் இறுதிக் கட்டமான 1967 இல் திமுக வை ஆட்சி பீடத்தில் அமர்த்தி முதல்வராக பொறுபேற்று மிகக் குறுகிய காலமே முதல்வராக பதவி வகித்தாலும் அவை வரலாற்றில் மிகச் சிறந்த காலங்கள் என பதிவானது.

உடல்நிலை பாதிப்படைந்த பின்னர் அண்ணா அவர்கள் மறைந்தார். எனினும் அவரது தமிழும், அரசியல் நுணுக்கங்களும், இளைஞர்களை கவர்ந்திழுக்கும் நகைச்சுவையும் தகவல்களும் ஒருங்கே சேர ஒவ்வொரு மேடையிலும் அவர் ஆற்றிய உரைகள் என பலவுண்டு. அரசியலில் பேரறிஞர் அண்ணாவின் பங்கு அளப்பரியது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளிற்கு தனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

“நாடகக் கலையில் தொடங்கி திரைக் கலையில் திகழ்ந்து அரசியலில் ஒளிர்ந்த விதத்தில் எனக்கு எந்நாளும் கிரியாஊக்கியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் இன்று.

கூட்டாட்சித் தத்துவத்தை முன்னிறுத்தி மாநிலங்களின் உரிமைகளுக்காக அவர் தந்து சென்ற அரசியல் தத்துவங்கள் நம்மைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றன.

‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்பது அலங்காரச் சொற்களல்ல. நிறைவான வாழ்க்கைக்கு வழிசொல்லும் தத்துவம்.

அவரை வாழ்த்துவது என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வதற்கு இணை. வணங்கி வாழ்த்துகிறேன். – திரு.கமல்ஹாசன், MP – தலைவர் – மக்கள் நீதி மய்யம்

https://twitter.com/Maiatamizhargal/status/1967552334508237068

நன்றி : மக்கள் நீதி மய்யம்