செப்டம்பர் 05, 2025
ஒவ்வொரு நாளில் ஒவ்வொரு சிறப்பு அமையும். தேசத் தலைவர்களின் பிறந்தநாள் ஏதாவதொரு சிறப்பு நாள் அல்லது பண்டிகை என பல்வேறு நிகழ்வுகள் அமையக்கூடும். ஆனால் இந்த ஆண்டில் செப்டம்பர் 5 ஆன இன்று பல சிறப்புகள் அமைந்துள்ளது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.

செப்டம்பர் 5, அற்புதமாக அமைந்த நன்னாள் இன்று ! நம் மீலாது நபி, நம் ஓணம். ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு என்று நல் உரை சொன்ன நம் ஆசிரியர் தினம். வீரத்திருமகன், கப்பலோட்டிய தமிழன் நம் வ.உ.சி பிறந்த தினம்.
இப்படிப்பட்ட திருவிழாக்கள் நித்திய நிகழ்வாய் ஆக என் வாழ்த்துகள். இனி கோளும் நாளும் என்ன செய்யும் ?
நம் அறிவையும் அன்பையும் சுற்றி வந்து வாழ்த்தும் !
நாளை நமதே.
திரு.கமல்ஹாசன், பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர், தலைவர் – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்