டிசம்பர் : 01, 2025

திராவிடர் கழகத்தின் தலைவரும், தந்தை பெரியாரின் சீடர்களில் ஒருவரான திரு.கே.வீரமணி அவர்களின் பிறந்தநாளான இன்று மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.

“முன்னெப்போதையும்விட, தந்தை பெரியாரின் தேவை மிகுந்திருக்கும் சமூகச் சூழல் இன்று நிலவுகிறது. பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு கீ.வீரமணி அவர்களின் பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவதோடு, அவர்தம் வாழ்நாள் பணியில் கரம்கோப்பதும்கூட நம் அனைவரின் கடமை.

என்னாலானதை நான் செய்யக் காத்திருக்கிறேன். நம்மாலானதை நாம் செய்வோம். ஆசிரியர் அவர்கள் வாழிய நீடு, செயலூக்கத்தோடு.” – திரு.கமல்ஹாசன்

“பெரியாரின் சொற்களைப் பரப்புவதே வாழ்நாள் பணியாகக் கொண்டு இயங்கும் ஆசிரியர் மானமிகு ஆசிரியர் கீ.வீரமணி அவர்களின் பிறந்த நாளில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.கமல் ஹாசன் அவர்களின் வாழ்த்துச் செய்தி”. – மக்கள் நீதி மய்யம்

நன்றி : மக்கள் நீதி மய்யம்