புது தில்லி – டிசம்பர் : 01, 2025
இந்திய பாராளுமன்றத்தில் வரவிருக்கும் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கவிருப்பதை தொடர்ந்து அவையில் நடக்கவிருக்கும் செயல்பாடுகள் குறித்து இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் அதன் தலைவரும் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினருமான திரு.கமல்ஹாசன் அவர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


இந்த ஆலோசனைக் கூட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களைவை தலைவருமான திரு.மல்லிகார்ஜுன கார்கே அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலவைர், மற்றும் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான திரு.ராகுல்காந்தி அவர்கள் உட்பட பல தலைவர்களும் அந்த அரங்கில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.


டெல்லியில் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான இந்தியா கூட்டணியினர் ஆலோசனை.
கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல் ஹாசன் அவர்கள். – மக்கள் நீதி மய்யம்
நன்றி : மக்கள் நீதி மய்யம்