கோவை : ஜூலை 01, 2025

மக்களுக்கான மகத்தான பணியில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். தமது தலைமையில் இயங்கிய நற்பணி இயக்க நிர்வாகிகளையும் அப்பணியில் ஈடுபடுத்தி வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே. அவ்வகையில் நற்பணியில் இருந்து அடுத்தகட்டமாக நடுவுநிலைமை போற்றும் ஓர் கட்சியாக மக்கள் நீதி மய்யம் எனும் centrism நிலைப்பாடு கொண்ட கட்சியை கடந்த 2018 ஆண்டுமுதல் தலைமையேற்று தொடர்ச்சியாக நடத்தி வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் கட்சி துவக்கப்பட்ட நாளில், அவரது பிறந்தநாளான நவம்பர் 7 அன்றும் பல்வேறு நலப்பணிகள் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். அதன் தொடர்ச்சியாக கட்சியின் அலுவலகம் ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கிளை அலுவலகம் வெகு விமரிசையாக திறக்கப்பட்டது. கவுண்டம்பாளையம் மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் திரு.மனோகரன் தலைமையில் திரு.தங்கவேலு அவர்கள் முன்னிலை வகித்து திறந்து வைத்து மற்றுதிரனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் வருகின்ற 2026 தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது, கட்சியின் கட்டமைப்பை விரிவுபடுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது போன்ற முக்கிய பணிகள் குறித்து துணைத்தலைவர் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.

நன்றி : மக்கள் நீதி மய்யம்