ஜனவரி 5, 2026
இந்திய செஸ் வீராங்கனை செல்வி சாதனா அவர்களுக்கு வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் செயற்குழு உறுப்பினரான திரு.செல்வத்தங்கம் அவர்கள் இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான நிதியாக இந்திய மதிப்பிலான 80,000 ரூபாயை நன்கொடையாக இன்றைய நிகழ்வில் மகிழ்வுடன் அளித்து மென்மேலும் வெற்றிக் கோப்பைகளை கைப்பற்றி சிறந்து விளங்கிட வேண்டும் என்று உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார்.
திரு.செல்வத்தங்கம் அவர்கள் நமது இணையதளமான https://maiatamizhargal.com இன் நிறுவனர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனாவிற்கு, உதவிக்கரம் நீட்டிய வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கம்.
இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் 2ஆம் இடம் பிடித்ததுடன், ஜெர்மனி மற்றும் குரோவாசியா போன்ற நாடுகளில் நடக்கவிருக்கும், செஸ் போட்டிகளில் கலந்து கொள்ளும்
ஈரோடு மாவட்டம், சிவகிரியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் இந்திய செஸ் வீராங்கனை செல்வி. சாதனா அவர்களுக்கு,
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
வடஅமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர் திரு.செல்வத்தங்கம் அவர்கள், ரூ. 80,000 உதவித்தொகையை ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கி, மேன்மேலும் பல்வேறு போட்டிகளில் வென்று சாதனை படைக்க வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். – மக்கள் நீதி மய்யம்



நன்றி : மக்கள் நீதி மய்யம் & வட அமெரிக்கா கமல்ஹாசன் நற்பணி இயக்கம்