சென்னை : செப்டம்பர் 21, 2024
பதிவு புதுப்பிக்கப்பட்டது : Sep 22, 2024

மக்கள் நீதி மய்யத்தின் இரண்டாவது பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தலைமை வகித்தார். செயற்குழு, நிர்வாகக்குழு, துணைத்தலைவர்கள், பொதுசெயலாளர், மாநில செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பதினாறு தீர்மானங்கள் இயற்றப்பட்டது. அதில் முதல் தீர்மானமாக கட்சியின் தலைவராக திரு.கமல்ஹாசன் அவர்கள் ஏகமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
தலைவர்களின் வாழ்த்துகளை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்ட தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தமது நன்றியை தெரிவித்துள்ளார்.
நன்றி : மக்கள் நீதி மய்யம் & செய்தி இணையதளங்கள்