பிப்ரவரி : 26, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் முதுபெரும் அரசியல் தலைவருமான திரு.நல்லகண்ணு அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தனது 101 ஆவது வயதில் மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.

தனது 18 வயதில் பொதுவாழ்வில் நுழைந்த நல்லகண்ணு அவர்கள் இந்திய கம்யூனியுஸ்ட் கட்சியில் இணைந்தவர். ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் பற்றிய தகவலை ஜனசக்தி பத்திரிக்கையில் எழுதியது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு சென்று அவற்றை பறிமுதல் செய்தார் ஆட்சியர். இந்த செயலே மக்களுக்கான பணியில் இறங்கிட துவக்கமாக இடம்பெற்றது. பல்வேறு போராட்டங்களில் தவறாமல் பங்கேற்றார் நல்லகண்ணு அவர்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டது நெல்லை சதியில் பங்கிருப்பதாக புனையப்பட்ட வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று இருட்டறையில் கழிந்த பின்னர் அவர் வெளியே வரும்போது இந்தியா சுதந்திரம் அடைந்திருந்தது.

அன்று தொடங்கிய அரசியல் பயணம் அவர் மறையும்வரை எந்த இடைநிறுத்தலும் இன்றி இறுதிவரை தொடர்ந்து வந்தது.

இவருடைய 80 ஆவது வயதில் நடைபெற்ற விழாவில் கட்சி வழங்கிய 1 கோடி ரூபாய் நிதியை தனது கட்சிக்கே மீண்டும் தந்தார். தமிழக அரசு அம்பேத்கர் விருதும் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது அதில் பாதியை விவசாய சங்கத்திற்கும் மீதியை தனது கட்சிக்கும் நன்கொடையாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. இத்தகைய செயல்களில் இருந்து நல்லகண்ணு அவர்களின் தியாக மனப்பான்மை மற்றும் அப்பழுக்கற்ற எண்ணமும் நமக்கு மிகத் தெளிவாக புரியும்.

மக்கள் நீதி மய்யம் துவங்கப்பட்ட போது மூத்த தலைவரான திரு.நல்லகண்ணு அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து பேசினார் திரு.கமல்ஹாசன் அவர்கள். தான் கட்சி தொடங்கவிருக்கும் தகவலையும் பகிர்ந்து கொண்டார். அரசியல் மற்றும் நாட்டின் செயல்பாடுகள் குறித்தும் இருவருக்கமான உரையாடல் நீடித்தது. தமக்கு மிகப் பிடித்த மாபெரும் அரசியல்வாதிகளில் ஐயா திரு.நல்லகண்ணு அவர்களின் மீது மய்யத் தலைவருக்கு மிகப் ப்ரியம் உண்டு. ஐயா திரு.நல்லகண்ணுவின் மறைவு அறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இவ்வமயம் சென்னையில் இல்லாத சூழலில் தமது கட்சியின் துணைத்தலைவர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் நம்மவர் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் ஆகியோரை நல்லகண்ணு அவர்களின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தும்படி அறிவுறுத்தினார்.


#Nallakannu
#KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #CPI #CommunistPartyOfIndia

நன்றி : மக்கள் நீதி மய்யம் & சமூக ஊடக வலைத்தளங்கள் மூலமாக தொகுக்கப்பட்டது