நவம்பர் : 07, 2025

இந்தியாவின் மகத்தான திரைக்கலைஞரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அப்பழுக்கற்ற நேர்மைத் தலைவரான நம்மவர் அவர்கள் கடந்து வந்த பாதை மிகச் சுலபமானது அல்ல. எண்ணிலடங்கா தடைகள் மற்றும் ஆதாரமற்ற பழிசொற்கள் மற்றும் அர்த்தமற்ற ஒப்புக் கொள்ள முடியாத தவறான பேச்சுக்கள் என பல சோதனைகளை சந்தித்திருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆயினும் நம்மவர் தலைவர் அவர்கள் தமது வாழ்நாளில் மிக உச்சத்தை தொட்டிருக்கிறார் பல்வேறு புகழ்பெற்ற விருதுகளை பெற்று திரையுலகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணியை விட்டுவிடாமல் செய்து வருகிறார். அது மட்டுமல்லாது தமது நிர்வாகிகள் மூலமாகவும் பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் எட்டு ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் நமது தலைவர் தலைமையில் நேர்மையாக நடை போட்டு வருகிறது. தமது நிர்வாகத்திறமையால் மிகச்சிறந்த அரசியல் இயக்கமாக நடத்தி வருகிறார்.

அப்படியான ஓர் அற்புதத் தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு பெருமிதம் அடைகிறது நமது maiatamizhargal.com