நவம்பர் 17, 2025

மக்கள் நீதி மய்யம் தலைவர், பாராளுமன்ற உறுப்பினருமான நம்மவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்த நாள் நவம்பர் 7 அன்று தமிழகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அவரது நற்பணி இயக்கத்தினர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அவரது அபிமானிகள் அனைவரும் வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர். அன்றைய தினத்தில் இரத்ததானம், உடலுறுப்பு தானங்கள், உணவு வழங்குதல், மருத்துவ முகாம்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகள், பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் என வழங்கி மகிழ்ந்தனர்.

நவம்பர் என்றாலே மாதத்தின் முதல் நாளே நம்மவர் தலைவரின் பிறந்தநாளை நோக்கிய கொண்டாட்டங்கள் துவங்கி விடும். அந்த வாரம் மட்டுமில்லாமல் நவம்பர் மாதம் முழுதுமே நம்மவர் மாதம் தான் என்கிறார்போல் ஒவ்வொரு பகுதியிலும் மேற்சொன்ன பல்வேறு நலத்திட்ட பணிகள் நடந்தவண்ணம் இருக்கும்.

அவ்வாறே கமல்ஹாசன் நற்பணி இயக்கம் வட அமெரிக்காவின் பிரிவு நிர்வாகிகளின் பெரு முயற்சியால் அவர்களின் நன்கொடையில் மூன்று நம்மவர் படிப்பகங்கள் முறையே மதுரையில் மலைசாமிபுரம், பரமக்குடியில் வேந்தோணி மற்றும் அருப்புகோட்டை கல்லூரணி ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வருகிறது. அங்கே சிறுவர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள், கல்லூரி மாணாக்கர்கள் என அனைவரும் படித்து பயன்பெறும் வகையில் அனைத்து விதமான நூல்களும் அமைத்து தரப்பட்டுள்ளது. மற்றும் மாலை நேரங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பித்து வருவதும் நடைபெற்று வருகிறது. மட்டுமல்லாது Group தேர்வுகளான TNPSC, UPC, NEET, திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் என அனைத்தும் முற்றிலும் இலவசமாக தந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட நம்மவர் படிப்பகங்களில் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் குறிப்பிடத்தக்க வகையில் மாணவர்கள் பயிலும்போது தடையில்லா மின்சாரம் கிடைத்திட வழி செய்யும் வகையில் UPS உபகரணம் படிப்பகங்களுக்கும் அந்தந்த பயிற்று ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது கூடுதல் சிறப்பு.

என் கடன் நற்பணி செய்து கிடப்பதே என்கிற வகையில் தலைவரின் மீது பேரன்பு கொண்டவர்களான வட அமெரிக்க கமல்ஹாசன் நற்பணி இயக்கம் நிர்வாகிகளும் அவ்வாறே செயல்பட்டு வருவது மெச்சத்தக்கது.

மய்யத்தமிழர்கள் இணையதளம் அவர்கள் அனைவருக்கும் தமது உளமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

மக்கள் நீதி மய்யம் ட்விட்டர் தளத்தில் பதியப்பட்ட விபரங்கள் கீழ்வருவன

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக,

மதுரை – மலைச்சாமிபுரம், அருப்புக்கோட்டை – கல்லூரணி, பரமக்குடி – வேந்தோணி ஆகிய இடங்களில் அமைந்துள்ள நம்மவர் படிப்பகத்தில், கேக் வெட்டி கொண்டாடியதுடன், படிப்பகத்திற்கு தடையில்லா மின்சாரம் கிடைக்க ஏதுவாக UPS வழங்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளர் திருமதி. பத்மா ரவிச்சந்திரன் (மதுரை & நெல்லை மண்டலங்கள்), மதுரை மண்டல அமைப்பாளர் திருமதி. கலையரசி, வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகிகள் திருமதி. பத்மாவதி (மயிலாப்பூர்), திருமதி. சுகன்யா ஹாரிஸ், மாவட்ட அமைப்பாளர்கள் திருமதி. உமாராணி, திருமதி. லீலாவதி, திருமதி. உமையாள், திருமதி. பாண்டி செல்வி, திருமதி. மணிமேகலை, மாவட்டத் துணை அமைப்பாளர் திருமதி. ஜெயலட்சுமி, மய்ய நிர்வாகிகள் திருமதி. சுகுணா, திருமதி. உமாராணி, திருமதி. ராஜலெட்சுமி ஆகியோரின் ஏற்பாட்டில்,

மதுரை – மலைச்சாமிபுரம் படிப்பக ஆசிரியர்கள் திருமதி. சரவணவள்ளி, திருமதி. முத்துராக்கு, செல்வன். செங்கதிர் ஆகியோரிடமும்,

அருப்புக்கோட்டை – கல்லூரணி படிப்பக ஆசிரியர்கள் திருமதி. சுப்புலெட்சுமி, திருமதி. பாண்டி மீனாள், திரு. கலைவேந்தன் ஆகியோரிடமும்,

பரமக்குடி – வேந்தோணி படிப்பக ஆசிரியர்கள் திருமதி. ராசாத்தி, திருமதி. நாகமஞ்சு ஆகியோரிடமும் UPS வழங்கப்பட்டது.

கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் திரு. செந்தில் ஆறுமுகம் அவர்கள், பரமக்குடி – வேந்தோணி நம்மவர் படிப்பகத்தில் திறன் பயிலும் மாணவர்களுடன் காணொளி மூலமாக உரையாடினார்.

மதுரை – மலைச்சாமிபுரம் படிப்பகத்திற்கு, நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், தொழிற்சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் Dr .R.சொக்கர் புத்தகங்களை வழங்கினார். தொடர்ந்து வட அமெரிக்க கமல் ஹாசன் நற்பணி இயக்கத்தின் சார்பில், 3 இடங்களிலும் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

நிகழ்வில் மகளிர் அணியின் நெல்லை மண்டல அமைப்பாளர் திருமதி. செல்வி, மாவட்ட அமைப்பாளர் செல்வி. முகேஸ்வரி, மாவட்டச் செயலாளர்கள் திரு. கார்த்திகேயன், திரு. கதிரேசன், நம்மவர் தொழிற்சங்கப் பேரவையின் செயற்குழு உறுப்பினர்கள் திரு. ரமேஷ், திரு. ஜெகன், திரு. பிரசாத், நிர்வாகிகள் செல்வி. ஜோதி, திருமதி. சிவகாமி, திரு. வினோத் குமார், திரு. செல்வா, பொறியாளர் திரு. விவேக், திரு. செல்வராஜ், திரு. சாரதி உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர். – மக்கள் நீதி மய்யம்

கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா – (அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு கீழே)

தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை மூன்று நம்மவர் படிப்பகங்களிலும் நமது வடஅமெரிக்க இயக்கத்தின் செயலாளர் திரு.தயா பிரபு அவர்களின் முன்னேற்பாட்டில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது மூன்று படிப்பகங்களிலும் TNPSC தேர்வு பயிறசி தொடங்கவுள்ளதை அறிவித்தோம் இந்நிகழ்வில் மநீமவின் மதுரை மண்டல மகளிர் அணி மூன்று படிப்பகங்களுக்கும் UPS கருவிகளை வழங்கினர். அவர்களுக்கு நமது இயக்கத்தின் சார்பில் பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் மாணவ செல்வங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் தலைவரை வாழ்த்தி படிப்பக்கங்களினால் அவர்கள் அடைந்த முன்னேற்றத்தை விவரித்தனர் மூன்று படிப்பகங்களில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இனிய விருந்து அளித்து மகிழ்ந்தோம் – கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா

நன்றி : மக்கள் நீதி மய்யம், கமல்ஹாசன் நற்பணி இயக்கம் – வட அமெரிக்கா, நம்மவர் தொழிற்சங்க பேரவை மற்றும் நம்மவர் படிப்பகம் ஆசிரியர்கள் மற்றும் பராமரிப்பு நிர்வாகிகள்